பிக் பாஸ் வீட்டில் சிவானிக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியும் மிகப்பெரிய அதிர்ச்சியும்!

பிக் பாஸ் இல் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. புதிய புரமோவில் சிவானி அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2020, 10:24 AM IST
பிக் பாஸ் வீட்டில் சிவானிக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியும் மிகப்பெரிய அதிர்ச்சியும்! title=

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 12 வாரங்களை கடந்துள்ளது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா மற்றும் அனிதா என பத்து பேர் வெளியேறியுள்ளனர். 

இந்த பிக் பாஸ் (Bigg Boss Tamilசீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. அந்தவகையில் பிக் பாஸ் இல் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. புதிய புரமோவில் சிவானி அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

ALSO READ | பிக் பாஸ் 4 இல் மீண்டும் ஓபன் நாமினேஷன்- யார் யாருக்கு ஆப்பு?

சிவானி (Shivani Narayanan) பாத்ரூம் பகுதியில் இருந்த போது அவரை freeze என பிக் பாஸ் கூறுகிறார். அப்போது அவரது அம்மா கதவு வழியாக உள்ளே அனுப்பப்படுகிறார். அதை பார்த்து சிவானி கண்கலங்கி ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்து அழுகிறார். அதன் பின் சிவனியின் அம்மா அவரை திட்ட தொடங்குகிறார். 

"எதுக்கு இந்த ஷோவுக்கு நீ வந்தே? நீ என்ன இந்த வீட்டுக்குள்ள பண்ணிட்டு இருந்தா வெளியே யாருக்கும் தெரியாதுனு நெனைச்சிட்டு இருக்கியா" என கேட்டு பேசி இருக்கிறார். இதுவே இன்றைய முதல் புரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

ALSO READ | பிக் பாஸ் சோம் சேகரின் செல்ல நாய் திடீர் மரணம்! வீடியோ!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News