தமிழகத்தின் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர்

Last Updated : Jul 19, 2020, 04:28 PM IST
  • நடிகர் அஜித் வீட்டில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக, மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • அஜித் ஒரு கார் பந்தய பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது
  • இதே போன்று கடந்த 5ம் தேதி நடிகர் விஜய் வீட்டில் குண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
தமிழகத்தின் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்…!!! title=

தல அஜித்தை தெரியாதவங்க தமிழ்நாட்டுல இருக்கமுடியுமா என்ன. திரைப்பட நடிகர் அஜித் குமார் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சில மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர். அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அவரது வீடு இருக்கிறது. அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, ஒரு மர்ம நபர் காவல்துறையின் கட்டுப்பாடு அறைக்கு தொடர்புகொண்டு, கூறியதை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ | தமிழகத்தில் இன்றைய நிலவரம்: 48,669 பேருக்கு சோதனை; புதிதாக 4,538 பேர் பாதிப்பு; 79 மரணம்

அஜித் குமார் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. குண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், விழுப்புரத்தை சேர்ந்த ஒரு நபர் தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பின்னர் மிரட்டல் வதந்தி என்று தெரிய வந்தது.

தமிழ் திரைப்பட நடிகரான அஜித்குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, பூவெல்லாம் உன் வாசம் என்பது போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் ரசிகர்களால் அல்டிமேட் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்

இவருக்கு கார் பந்தயத்தில் பங்கேற்பது மிகவும் பிடித்த விஷயம். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் குறித்த 2012ஆம் ஆண்டு பட்டியலில், அஜித் குமார் 61 ஆவது இடத்தினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக நடிகர் விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். ஜூலை மாதம் ஐந்தாம் தேதி, இதேபோன்று, விஜய் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. அதை அடுத்து, அவருக்கு சொந்தமாக சென்னையில்  சாலிகிராமம் மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த மிரட்டலும் வெறும் புரளி தான் என்பதை விசாரணையில் தெரியவந்தது

Trending News