நினைத்தேன் வந்தாய் சீரியலில் கலாட்டா... சவால் விட்டு சிக்கிய எழில்

Ninaithen Vandhaai Today's Episode Update: ஃபன் மூவ்மெண்ட் கலாட்டாவாக மாறிய நினைத்தேன் வந்தாய்.. சவால் விட்டு சிக்கிய எழில் - இன்றைய எபிசோட் அப்டேட் 

Last Updated : May 7, 2024, 03:03 PM IST
நினைத்தேன் வந்தாய் சீரியலில் கலாட்டா... சவால் விட்டு சிக்கிய எழில் title=

Ninaithen Vandhaai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மனோகரி அஞ்சலியை பிரிக்க நினைக்க சுடர் பொங்கி எழுந்து அவளுக்கு பதிலடி கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, அஞ்சலி தூங்காமல் எழுந்து வந்து நான் உன்கூட தான் தூங்குவேன் என்று சுடர் ரூமுக்கு வருகிறாள். சுடர் அப்பாரும் பக்கத்தில் தான் இருக்கு நீ அங்க போய் தூங்கு இல்ல மேல போய் மத்தவங்களோட சேர்ந்து தூங்கு என்று சொல்ல அஞ்சலி நான் உன் கூட தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கிறாள்.

இதனால் சுடரும் சம்மதம் சொன்ன அவை சோகமாக இருப்பதை பார்த்து அஞ்சலி நான் ஒரு கதை சொல்லட்டுமா என்று கதை சொல்லி சுடரை சிரிக்க வைக்க இருவரும் சிரிக்க சிரிப்பு சத்தத்தை கேட்டு அஞ்சலி டைம் ஆச்சுல இன்னும் இங்கு என்ன பண்ற ரூமுக்கு போ என்று திட்டி அஞ்சலி அழவைத்து மேலே அனுப்பி வைக்கிறான். 

இதனால் சுடர் உங்களால குழந்தைங்க உலகத்துக்குள்ள வரவே முடியாது. கோபப்படும் மட்டும் தான் தெரியும் என்று திட்ட எழில் குழந்தைகளை என்னுடைய கண்ட்ரோலுக்குள் கொண்டு வர முடியும். என்னால குழந்தைங்கள பாத்துக்க முடியும். ஒரே வாரத்துல செய்து காட்டுறேன் என்று சவால் விடுகிறான். 

மறுநாள் காலையில் சுடருக்கு முன்பாக ரூமுக்கு வந்த எழில் குழந்தைகளை எழுந்திருங்க என்று சொல்லிவிட்டு வெளியே வர சுடர் சொன்னதும் அவங்க எழுந்துடுவாங்களா போய் பாருங்க என்று சொல்ல எழில் திரும்பி ரூமுக்கு வர எல்லோரும் தூங்கிக் கொண்டே இருக்கின்றனர். 

பிறகு எழில் எல்லோரையும் எழுப்பி குளிக்கணும் என்று சொல்ல அஞ்சலி சுடர் தான் குளிக்க வைப்பா என்று சொல்கிறாள். இன்னைக்கு நான் குளிக்க வைக்கிறேன் என்று அவளை கூட்டிச் செல்லும் எழில் கடைசியில் நனைந்து வருவதை பார்த்து சுடர் சிரிக்கிறாள். 

கொஞ்ச நேரத்தில் கவினை குளிக்க வைக்கும் மறந்துட்டீங்க என்று எழிலுக்கு ஞாபகப்படுத்தி கலாய்க்க அவன் கவினை குளிக்க வைக்க கூட்டி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | இளையராஜா குறித்த கேள்வி - வைரமுத்து கொடுத்த ரியாக்சன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News