தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ஜிவி பிரகாஷ்!

GV Prakash Statement: ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து பெற்றுள்ள நிலையில், தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து ஜிவி பிரகாஷ் இன்ஸ்டாவில் பதிவு.  

Written by - RK Spark | Last Updated : May 15, 2024, 12:53 PM IST
  • விவாகரத்து பெற்று ஜிவி பிரகாஷ், சைந்தவி.
  • ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
  • இருவருக்கும் 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ஜிவி பிரகாஷ்! title=

ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்றுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இதுபற்றிய டாப்பிக் தான் எங்கு திரும்பினாலும் உள்ளது. பலரும் ஜிவி பிரகாசை இணையத்தில் வசை பாடி வந்தனர். இது தேவையில்லதா முடிவு, யோசித்து முடிவு செய்து இருக்கலாம், இப்படி செய்து இருக்க கூடாது என்று பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். 2013ம் ஆண்டு ஜிவி பிரகாஷும், சைதவியும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2020ம் ஆண்டு இந்த ஜோடிக்கு அன்வி என்ற மகள் பிறந்தது. இந்நிலையில், இருவரும் ஒருமனதுடன் பிரிவதாக தெரிவித்து இருந்தனர்.

மேலும் படிக்க | திருமண வாழ்விலிருந்து நாங்கள் பிரிகிறோம்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு

"ஜிவி பிரகாஷும் நானும் பிரிவதாக முடிவு செய்து உள்ளோம். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். நன்கு யோசித்து தான் இந்த முடிவை நாங்கள் எடுத்து உள்ளோம். நாங்கள் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்குள் தனிப்பட்ட இந்த முடிவை ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது தேவை எங்களது பிரவேசியை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், ஜிவி பிரகாஷ் மீது அனைவரும் விமர்சனங்களை வைக்க அதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார். பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல என்று அவரது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டுள்ளார். "புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. 

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள் . அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். 

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | நடிகை லைலாவின் மகன்களை பார்த்து இருக்கிறீர்களா? வெளியான புகைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News