கார்த்திகை தீபம் அப்டேட்: காதலனாக கார்த்திக்கை அறிமுகம் செய்ய போகும் ரியா.. தீபாவுக்கு தெரிய வருமா உண்மை?

Karthigai Deepam Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 14, 2024, 12:07 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்
  • ரியா பெயருக்கு வரும் கொரியர்.
  • கோவிலில் சந்திக்கும் தீபா, ரம்யா.
கார்த்திகை தீபம் அப்டேட்:  காதலனாக கார்த்திக்கை அறிமுகம் செய்ய போகும் ரியா.. தீபாவுக்கு தெரிய வருமா உண்மை? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின்  நேற்றைய எபிசோடில் தீபா ரம்யா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரம்யாவின் அப்பா அவளுக்காக மாப்பிள்ளை பார்க்க ஒரு 15 ப்ரொபைல் வந்திருக்கு இதில் எதாவது சூஸ் பண்ண சொல்லு என்று சொல்லு என்று சொல்கிறார். அதன் பிறகு ரம்யாவிடம் பொறுமையாக எடுத்து பேசுவதாக சொல்லி தீபா வீட்டிற்கு கிளம்பி வருகிறாள். 

ரியா பெயருக்கு வரும் கொரியர்

இங்கே அபிராமி வீட்டில் ரியா பெயருக்கு ஒரு கொரியர் வர அதை பிரிந்து பார்க்கும் போது ஆனந்த் ரியாவின் கல்யாண போட்டோ என்பது தெரிய வருகிறது, ரியா இதை வீட்டு ஹாலில் மாட்ட வேண்டும் என்று சொல்ல அபிராமி, அருணாச்சலம் ஆகியோர் அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் ரியா மாட்டியே ஆக வேண்டும் என்று வாக்குவாதம் செய்ய தீபா வீட்டிற்குள் நுழைகிறாள். 

இங்கே நடப்பதை தெரிந்து கொண்ட தீபா அதான் மாட்ட வேண்டாம்னு சொல்றாங்கல என்று பேச ரியா அப்போதும் தனது முடிவில் உறுதியாக இருக்க தீபா அந்த போட்டோவை பிடிங்கி கொண்டு போய் வெளியில் போட்டு உடைக்கிறாள். ரியா இதை விட பெரிய போட்டோவை நான் மாட்டி காட்டுறேன் என்று சவால் விடுகிறாள். 

அடுத்து கார்த்திக் வர தீபா தன்னுடைய ப்ரண்ட் அம்மு வீட்டிற்கு சென்றிருந்ததாக சொல்கிறாள், அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கணும் 15 ப்ரொபைல் வந்திருக்கு, இதுல ஏதாவது பேஸ்ட்டா சொல்லுங்க என்று கார்த்திக்கிடம் கேட்க அவன் மற்றவங்க வாழ்க்கைக்கு நான் எப்படி மாப்பிளை பார்க்க முடியும் என்று நோ சொல்கிறான். 

இந்த நேரம் பார்த்து ரம்யா போன் செய்ய தீபா போனை எடுத்து அம்மு என்று இன்னொரு பெயரை சொல்லி பேசுகிறாள். கார்த்திக்கிடம் என் ப்ரண்ட் கிட்ட பேசுங்க என்று போனை கொடுக்க கார்த்திக் வேண்டாம் என்று மறுக்க அவர் கூச்சப்படுகிறார் என்று சொல்லி விடுகிறாள் தீபா. 

மேலும் படிக்க | KS ரவிக்குமார் மற்றும் விக்ரமன் என்வாழ்வில் முக்கியமான நபர்கள் - சரத்குமார்!

கோவிலில் சந்திக்கும் தீபா, ரம்யா

மறுநாள் தீபாவும் ரம்யாவும் கோவிலில் சந்திக்க தீபா கல்யாண பேச்சை எடுக்க ரம்யா அமைதியாகவே நிற்கிறாள், இதனால் தீபா நீ யாரையாவது லவ் பண்ணுறியா என்று கேட்க ரம்யா ஆமாம் என் ஆபீஸ் எம்பிளாயி ஒருத்தரை லவ் பண்றேன் என்று சொல்லி கார்த்திக்கை அறிமுகம் செய்து வைக்க அழைத்து செல்கிறாள். இதையெல்லாம் கேட்ட ஐஸ்வர்யா ஒருவேளை அந்த நபர் கார்த்தியாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | திருமண வாழ்விலிருந்து நாங்கள் பிரிகிறோம்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News