கார்த்திகை தீபம் அப்டேட்: ரம்யாவால் கார்த்தியுடன் வந்த சண்டை.. தீபா கொடுத்த வார்னிங்

Karthigai Deepam Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 16, 2024, 03:07 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • தீபாவுக்கு அதிர்ச்சி, கோவம்.
  • கண்டீஷன் போடும் தீபா.
கார்த்திகை தீபம் அப்டேட்:  ரம்யாவால் கார்த்தியுடன் வந்த சண்டை.. தீபா கொடுத்த வார்னிங் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரம்யாவை கூட்டிக்கொண்டு பைக்கில் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தீபாவுக்கு அதிர்ச்சி, கோவம்

ரம்யா மற்றும் கார்த்திக் ஜோடியாக பைக்கில் செல்வதை பார்த்த ஒரு பெண்மணி தீபாவுக்கு தகவல் கொடுக்க தீபா அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். 

அடுத்ததாக கார்த்திக், ரம்யா ஆகியோர் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு வர ஆனந்த் டெண்டர் நமக்குத்தான் கிடைக்கும் என்று ஆவலோடு இருக்க அது ரம்யா கைக்கு செல்கிறது. இதனால் ஆன குழப்பம் அடைய ஃபிளாஷ் கட்டில் பி ஏ ஆனந்திடம் பேசிய விஷயத்தை கேட்டு ரம்யாவிடம் சென்று அமௌன்ட்டை மாற்றிய தெரிய வருகிறது. 

மேலும் படிக்க | CWC 5-ல் இருந்து தாமு விலகாததற்கான காரணம் என்ன? வெங்கடேஷ் பட் சொன்ன சீக்ரெட்!

அடுத்ததாக ஆனந்த் என்ன கார்த்தி புது கம்பெனிக்கு விசுவாசமா வேலை செய்து போல என்று கேள்வி கேட்க ஆமா நான் வேலை செய்கிற கம்பெனிக்கு விசுவாசமா இருக்கேன். நேர்மையா வேலை செய். இப்படி குறுக்கு வழியில முன்னேறினா அது நிலைக்காது என்று அறிவுரை சொல்கிறான்இப்படி குறுக்கு வழியில் முன்னேறினா அது நிலைக்காது என்று அறிவுரை சொல்கிறான்.

அதன் பிறகு கார்த்திக் வீட்டுக்கு வர தீபா நீங்க ஒரு பொண்ணு கூட பைக்ல போனீங்களா என்று கேட்க அவனும் ஆமாம் என்று சொல்ல தீபா கோபப்படுகிறாள். கார்த்திக் என்னோட பாஸ் தான் கூட்டிட்டு போனேன் கார் ரிப்பேர் ஆயிடுச்சு. முக்கியமா போக வேண்டிய டெண்டர் மீட்டிங். அதனால் பைக்கில் கூட்டிட்டு போனேன் என்று சொல்கிறான். 

கண்டீஷன் போடும் தீபா

இதைக் கேட்ட தீபா இதெல்லாம் சரிதான் ஆனால் இனி யாரையும் நீங்க பைக்ல கூட்டிட்டு போகக்கூடாது. உங்க கூட பைக்ல உட்காரும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு என்று கண்டிஷன் போட கார்த்திக்கு அதற்கு சம்மதம் தெரிவித்து பிரச்சனையை தீர்க்கிறான். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராய்க்கு விபத்து..! கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News