KH 234 படத்தின் டைட்டில் இதுதான்..!

KH 234 Title: கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Nov 6, 2023, 05:15 PM IST
  • கமல்ஹாசன் நடிக்கும் 234வது படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்.
  • த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோட் நடிக்கின்றனர்.
KH 234 படத்தின் டைட்டில் இதுதான்..!  title=

‘நாயகன்’ படத்தில் கைக்காேர்த்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே “வெற்றிக்கூட்டணி” என பெயரெடுத்தவர்கள், கமல்-மணிரத்னம். இந்த படத்திற்கு பிறகு, சுமார் 36 வருடங்கள் கழித்து இருவரும் தற்பாேது ஒரு படத்தில் இணைகின்றனர். இப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. 

டைட்டில் இதுதான்

நடிகர் கமல்ஹாசனின் 234வது படமான இதற்கு, Thug Life என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் குறித்த வீடியோவை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். 

படத்தில் நடிப்பவர்கள்..

தக் லைஃப் படத்தில், கமலுடன் 3வது முறையாக கைக்காேர்த்து நடிக்கிறார், த்ரிஷா. ‘மன்மதன் அம்பு’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்து ‘தூங்காவனம்’ எனும் படத்திலும் அவருடன் கைக்கோர்த்தார். தற்போது மூன்றாவது முறையாக த்ரிஷா கமலுடன் இப்படம் மூலம் கைக்கோர்த்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அது மட்டுமன்றி, மனிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் ஏற்கனவே பணியாற்றியுள்ளார். 

துல்கர் சல்மான்:

மலையாள நடிகர் துல்கர் சல்மான், கமல்ஹாசனுடன் அவரது Thug Life படத்தில் இணைந்துள்ளார். மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவராக இருக்கும் மம்மூட்டியின் மகனான இவர், தமிழ் திரையுலகின் கவனம் ஈர்க்கும் நாயகனாக வலம் வருகிறார். இவர், ஏற்கனவே மணிரத்னமின் ‘ஓகே கண்மனி’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அப்படம் காதல் கதையாக இருந்தது. ஆனால், கமல்ஹாசனின் இந்த படம், வலுவான கதையம்சம் கொண்டதாக உள்ளது. இதுவரை லைட் ஹார்டட் கதைகளை தேர்ந்தெடுத்து வந்த துல்கர், கடந்த சில ஆண்டுகளாக சீரியஸான கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்ந்தெடுத்து வருகிறார். இப்படம் மூலம் அவர் முதன்முறையாக கமலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். 

மேலும் படிக்க | ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் Intro-வை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்

ஜெயம் ரவி:

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருண்மொழி வர்மனாக வந்து இந்திய அளவில் பிரபலமானார், ஜெயம் ரவி. காதல் கதாநாயகனாக வலம் வந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக புதுப்புது கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர், ஏற்கனவே த்ரிஷாவுடன் 3 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது இன்னொரு முறை இப்படம் மூலம் த்ரிஷாவுடன் கைக்கோர்க்க உள்ளார். 

மேலும் படிக்க | கமல்ஹாசன் - H. வினோத் இணையும் KH 233 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News