குட்டி தளபதியாக மாறிய சிவகார்த்திகேயன்! ரசிகர்களை சந்தித்து என்ன சொன்னார் தெரியுமா?

Actor Sivakarthikeyan Meets Fans Latest News Tamil : நடிகர் சிவகார்த்திகேயன், தனது ரசிகர்களை சந்தித்து பேசியுள்ள சம்பவம் ரசிகர்களுக்கு “இவர்தான் அடுத்த விஜய்யோ..” என்ற சந்தேகத்தை வரவழைத்துள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Mar 13, 2024, 06:10 PM IST
  • ரசிகர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்
  • என்ன சொன்னார்?
  • சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என்ன?
குட்டி தளபதியாக மாறிய சிவகார்த்திகேயன்! ரசிகர்களை சந்தித்து என்ன சொன்னார் தெரியுமா?  title=

Actor Sivakarthikeyan Meets Fans Latest News Tamil : தமிழ் திரையுலகில் முன்னணி நடிராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது ரசிகர்களை சந்தித்து பேசியுள்ள சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ரசிகர்களை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்:

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சென்னையில் தனது ரசிகர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவாவின் ரசிகர்கள் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிவா நன்றி தெரிவித்ததாகவும், தொடர்ந்து வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய் வழியில் சிவகார்த்திகேயன்?

டாப் ஹீரோவான விஜய், அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். கடைசி படத்தில் நடித்து முடித்த பிறகு முழு நேர அரசியலிலும் இறங்க இருக்கிறார். இவர், அரசியல் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பிருந்தே அவ்வப்பாேது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வந்தார். இந்த சந்திப்புகளின் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது வெளியிலேயே தெரியாது. கிட்டத்தட்ட அதே போலத்தான் சிவகார்த்திகேயனும் தனது ரசிகர்களை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, விஜய் விட்டுவிட்டு போகும் இடத்தை சிவகார்த்திகேயன்தான் பூர்த்தி செய்ய உள்ளதாக பலர் பேசி வரும் நிலையில், தற்போது இவர் ரசிகர்களை சந்தித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்திருக்கிறது. 

மேலும் படிக்க | தெலுங்கு சினிமாவில் இப்படி ஒரு படமா? காமி படத்தின் திரைவிமர்சனம்!

விஜய்யின் இடத்தை நிரப்புவாரா சிவா?

நடிகர் சிவகார்த்திகேயன், சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்து, தற்போது டாப் நடிகராக உயர்ந்துள்ளார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஜாலியான தொகுப்பாளர் என்ற பெயரை பெற்ற இவர், தனுஷ் உடன் 3 படத்தில் நடித்து பின்பு ஹீரோவாக உயர்ந்தார். ஒரு தொலைக்காட்சி விருது நிகழ்ச்சியில் “பெஸ்ட் எண்டெர்டெயினர் விருது” முதலில் நடிகர் விஜய்க்கு கொடுக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் டாப் ஹீரோவானவுடன் விஜய் கையால் அவருக்கு கொடுக்கப்பட்டது. அப்போது விஜய்யே, “அவரு குழந்தைகளை எல்லாம் புடிச்சிட்டாரு” என்று கூறினார். 

விஜய் நடிக்க வந்த புதிதில் அவரை மகளிருக்கும் குழந்தைகளுக்கும்தான் அதிகமாக பிடித்திருந்ததது. அதனால்தான், அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் என பலர் கூறி வருகின்றனர். 

பெரிய படங்களில் கமிட் ஆன சிவா:

கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ‘அமரன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம், உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படம், புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த மேஜர் முகுந்தின் வீர மரணத்தை வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் சிவா நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

மேலும் படிக்க | காதலரை கரம் பிடித்த 40 வயது பிரபல நடிகை! யாரென்று தெரிகிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News