இந்தியன் 2 பட அப்டேட்டுகளை அள்ளி வீசிய நடிகர் கமல்! CSK vs RCB லைவில் சுவாரஸ்யம்..

CSK vs RCB Match Indian 2 Updates By Actor Kamal Haasan : சென்னை-பெங்களூரு இடையயான போட்டி, நேற்று நடைப்பெற்றது. இதையடுத்து தமிழ் லைவ் கமெண்ட்ரியில் நடிகர் கமல் ஹாசனும் ஷங்கரும் கலந்து கொண்டனர். இதில் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டது.   

Written by - Yuvashree | Last Updated : May 19, 2024, 12:33 PM IST
  • கிரிக்கெட் லைவில் கலந்து கொண்ட கமல்ஹாசன்
  • இந்தியன் 2 படம் குறித்த அப்டேட்
  • என்னென்ன சொன்னார் தெரியுமா?
இந்தியன் 2 பட அப்டேட்டுகளை அள்ளி வீசிய நடிகர் கமல்! CSK vs RCB லைவில் சுவாரஸ்யம்.. title=

CSK vs RCB Match Indian 2 Updates By Actor Kamal Haasan : ஐபிஎல் 2024 தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையும் கடைசி லீக் ஆட்டம், நேற்று நடைப்பெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் ஆகியவை மோதின. இதில், லைவ் கமெண்ட்ரியில் இந்தியன் 2 படத்தின் ஹீரோ கமல்ஹாசனும் இயக்குநர் ஷங்கரும் கலந்து கொண்டனர். இதில் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை அவர் கொடுத்திருக்கிறார். 

சென்னை vs பெங்களூரு போட்டி:

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியின் முடிவில் பெங்களூரு அணி, 27 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் லைவ் கமெண்ட்ரியில் நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் ஷங்கருடன் கலந்து கொண்டு இந்தியன் 2 படத்தின் அப்டேட்டுகளை வழங்கினார். 

இந்தியன் 2 படத்தின் அப்டேட்டுகள்..

இந்தியன் 2 படம் குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், படம் கண்டிப்பாக ஜூலை மாதம் ரிலீஸாகும் என்று தெரிவித்தார். அது மட்டுமன்றி, இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார். இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். 

இந்தியன் 3 திரைப்படம்..

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை குறித்து பேசிய பாேது, இந்தியன் 3 படத்தின் கதையையும் இயக்குநர் ஷங்கர் தன்னிடம் கூறியதாகவும் அந்த கதை பிடித்ததால்தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் நடிகர் கமல்ஹாசன் கூறினார். மேலும், இந்தியன் 2 திரைப்படம் வெளியானதற்கு 6 மாதங்கள் கழித்து இந்தியன் 3 திரைப்படம் வெளியாகும் என்றும் அவர் கூறினார். படத்தின் ரிலீஸ் தேதி முன்பு வேறு ஒன்றாக இருந்து மீண்டும் மாற்றாப்பட்டதை தொடர்ந்து, படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா இல்லையா என்பது பலருக்கு சந்தேகமாக இருந்தது. இந்த சந்தேககங்களை தீர்க்கும் வகையில் அவர் இந்த அப்டேட்டை கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | கமல்ஹாசனை கட்டித்தழுவிய ரஜினி! என்ன விஷயம் தெரியுமா?

மும்பைக்கு சென்ற கமல்..

பிரபல தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பானதை தொடர்ந்து, அதன் லைவ் கமெண்ட்ரி, மும்பையில் இருக்கும் ஒரு ஸ்டுடியோவில் நடைபெறும். இதற்காக நடிகர் கமல்ஹாசனும் இயக்குநர் ஷங்கரும் மும்பைக்கு பறந்தனர். படம் எடுப்பவர்கள் பலர், தங்களது படங்களை அல்லது தொடர்களை ப்ரமோட் செய்வதற்காக கிரிக்கெட் கமெண்டிரியில் கலந்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், கமல்ஹாசனும் இதில் கலந்து கொண்டிருக்கிறார். 

இந்தியன் 2 படக்குழுவினர்..

1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 25 வருடங்கள் கழித்து உருவாவது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பினை தூண்டியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக நடைப்பெற்று வருகிறது. தொடர்ந்து பல சவால்களை சந்தித்த படக்குழு, தற்போது இப்படத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறது.  இந்தியன் 2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா, நெடுமுனி வேனு உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | அப்போ விவேக்..இப்போ மாரிமுத்து! வரிசையாக உயிரிழக்கும் இந்தியன் 2 பட நடிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News