சம்பளத்தை அள்ளிய த்ரிஷா.. 2023ல் டாப் சேலரி வாங்கிய நடிகைகள்

Top 5 Highest Paid Actress in 2023: இந்த வருடம் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அதிக சம்பளத்தை வாங்கிய டாப் 5 நடிகைகளைப் பற்றி பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 23, 2023, 11:06 AM IST
  • அதிக சம்பளத்தை வாங்கிய 5 ஹீரோயின்களை பற்றி பார்க்கலாம்.
  • இவர் ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளமாக வாங்குகிறார்.
  • ஒரு படத்தில் நடிக்க 4 கோடி சம்பளம் வாங்குகிறார் நடிகை சமந்தா.
சம்பளத்தை அள்ளிய த்ரிஷா.. 2023ல் டாப் சேலரி வாங்கிய நடிகைகள் title=

தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். அந்த வகையில் இன்னும் சில நாட்களில் 2023 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகைகளின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் எந்தெந்த நடிகைகள் இடம்பெற்றுள்ளனர், மேலும் இந்த 5 நடிகைகளில் யார் அந்த அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகை என்ற முழு விவரத்தையும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.

அதிக சம்பளத்தை வாங்கிய 5 ஹீரோயின்களை பற்றி பார்க்கலாம்:

த்ரிஷா: தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும மேலாக நாயகி இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர், த்ரிஷா. கடந்த 1999 ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார் நடிகை த்ரிஷா. அதன்பின் கடந்த 2000 ஆம் ஆண்டு ரிலீஸான சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயின் ஆனார். இதையடுத்து எல்லாமே இவருக்கு ஏற்றம்தான். அதுவும் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இருந்தது என சொல்லலாம். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்த அவர், அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளமாக வாங்குகிறார்.

மேலும் படிக்க | குய்கோ to பார்பி: ஓடிடியில் இந்த வாரம் பார்க்க வேண்டிய முக்கிய படங்கள்!

நயன்தாரா: கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக நிலைத்து நிற்பவர், நயன்தாரா. கமலைத்தவிர, தமிழ் திரையுலகில் உள்ள பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நாயகியாக நடித்தாலும் இடையிடையே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா ஜவான் படத்திற்காக 11 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். இந்த வருடத்தில் அதிகமாக சம்பளம் வாங்கிய ஹீரோயின்கள் வரிசையில் அவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

சமந்தா: மயோசிடிஸ் பிரச்னையால் இந்த ஆண்டு படங்களைத் தவிர்த்துவிட்டாலும், சம்பளம் வாங்குவதில் முன்னணியில் இருக்கிறார் நடிகை சமந்தா. நடிகை சமந்தா சமீபத்தில் சொந்த புரோடக்க்ஷன் கம்பெனி நிறுவியது குறிப்பிடத்தக்கது. சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சகுந்தலம்' திரைப்படம் படு தோல்வியடைந்தது. அடுத்ததாக வெளியான 'குஷி' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருந்த போதிலும் சமந்தாவுக்கான மார்க்கெட் சரியவில்லை. இந்தநிலையில் ஒரு படத்தில் நடிக்க 4 கோடி சம்பளம் வாங்குகிறார் நடிகை சமந்தா.

தமன்னா: 2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த தமன்னா தற்போது இந்தி படம் மற்றும் வெப் சீரிஸில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் தமன்னா, 'ஜெயிலர்' படத்தில் 'காவலா' பாடலுக்கு ஆடிய அசத்தல் நடனம் மிகவும் பிரபலமானது. இதைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதன்படி இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க 5 கோடி முதல் 7 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

பூஜா ஹெக்டே: மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கிய நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். அவருக்கு தெலுங்கு சினிமா உலகம் மிகப் பெரிய அளவில் கை கொடுத்தது. தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் இந்த வருடம் ஒரு படத்திற்கு ஆறு கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

மேலும் படிக்க | சலார் படத்தில் பிரபாஸ் வாங்கிய சம்பளம் மட்டும் இவ்வளவா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News