Manjummel Boys: தமிழகத்தில் சக்கைபோடு போடும் மஞ்சுமெல் பாய்ஸ்! இதுவரை செய்த வசூல் எவ்வளவு?

Manjummel Boys Box Office Collection Day 14 :  சில நாட்களுக்கு முன்பு மலையாள மொழியில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், தமிழகத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. இப்படம் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 4, 2024, 11:45 AM IST
  • உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்ட படம், மஞ்சுமெல் பாய்ஸ்
  • இப்படம் தமிழகத்தில் சக்கை போடு போட்டு வருகிறது
  • இதுவரை இப்படம் செய்த வசூல் எவ்வளவு?
Manjummel Boys: தமிழகத்தில் சக்கைபோடு போடும் மஞ்சுமெல் பாய்ஸ்! இதுவரை செய்த வசூல் எவ்வளவு?  title=

Tamil Nadu Manjummel Boys Box Office Collection Day 14 : மலையாள படங்களுக்கு எப்போதுமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. இருப்பினும், தமிழக தியேட்டர்களில் மலையாள படங்கள் வெளியானால், ரசிகர்கள் சிலர் மட்டுமே சென்று அப்படங்களை காண்பர். இன்னும் சிலர் ஓடிடியில் வெளியானவுடன் அப்படங்களை காண்பர். ஆனால், அந்த ரெக்கார்டுகளையெல்லாம் உடைத்தெறியும் வகையில் இருக்கிறது, சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம். 

மஞ்சுமெல் பாய்ஸ்:

சுற்றுலாவிற்காக கொடைக்கானலிற்கு வரும் நண்பர்கள், குணா குகையில் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்க்கின்றனர். அப்போது எதிர்பாராத வகையில், ஒரு நண்பன் மட்டும் பல அடி ஆழம் இருக்கும் குகைக்குள் விழுந்து விட, பிற நண்பர்கள் அவனை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். விழுந்த நண்பன் மீண்டும் உயிருடன் கிடைத்தாரா? நண்பர்களின் முயற்சி என்ன ஆனது? என்பதை விவரிக்கும் சர்வைவல் த்ரில்லர் படம்தான், மஞ்சுமெல் பாய்ஸ். 

உண்மை கதை:

கேரள மாநிலம், எர்ணாக்குளம் பகுதியில் உள்ள ‘மஞ்சுமெல்’ என்ற இடத்தில் இருந்து கொடைக்காணலுக்கு 2006ஆம் ஆண்டு வந்திருந்த நண்பர்கள் சந்தித்த உண்மை சம்பவம்தான், மஞ்சுமெல் பாய்ஸ் என்ற படமாக படைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சிதம்பரம் எஸ். பொடுவேல் இயக்கியிருக்கிறார். சுபைன் சஹிர், கலித் ரஹ்மான், ஸ்ரீநாத் பஸ்ஸி, பாலு வர்கீஸ், கணபதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். 

தமிழகத்தில் நல்ல வரவேற்பு..

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி கேரளா, தமிழகம் உள்பட சில மாநிலங்களில் வெளியானது. வெளியான போது படத்தை பார்த்து விட்டு வந்த தமிழக மக்கள், இதனை பார்த்து வியந்து பேச ஆரம்பித்தனர். தொடர்ந்து இப்படத்திற்கு பாசிடிவான விமர்சனங்களும் எழ வர ஆரம்பித்தது. இதையொட்டி, கடந்த இரண்டு வாரங்களாக மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | வாரிசு முதல் வலிமை வரை! சாய் பல்லவி நிராகரித்த படங்கள்!

Manjummel Boys

இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு?

மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியாகி இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றது. இதையடுத்து, கேரளா மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று வரை இப்படம் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10 கோடி வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற சாதனையையும் இப்படம் பெற்றிருக்கிறது. இதற்கு முன்னர் தமிழகத்தில் 2018 படம் 2.26 கோடி ரூபாய் படம் மட்டுமே அதிக வசூல் செய்திருந்தது. இது தவிர ஹிரிதயம், லூசிஃபர், பிரேமம் உள்ளிட்ட படங்கள் 2 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்திருந்தது. 

100 கோடியை நெருங்குகிறது..

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம், பரவா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ், சௌபின் ஷாஹிர், பாபு ஷாஹீர் மற்றும் ஷான் ஆண்டனி ஷாஹீர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டிருந்தது. இப்படம், மொத்தம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படம், வெளியான 11 நாட்களிலேயே ரூ.90 கோடி கலெக்ட் செய்திருந்தது. விரைவில் 100 கோடி வசூலை இப்படம் எட்டி விடும் என கூறப்படுகிறது. 

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் கதையை இயக்க இதற்கு முன்னர் பலர் முயற்சி செய்துள்ளனர். ஆனால், இப்படத்திற்கு பட்ஜெட் பெரிது என்பதால் பலர் இதை தயாரிக்க முன்வரவில்லை. இறுதியில், சிலரது அயராத முயற்சியால் இப்படம் எடுக்கப்பட்டு தற்போது இவ்வளவு பெரிய ஹிட் அடித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ உண்மை கதை என்ன? குணா குகையில் அப்படி என்னதான் நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News