நினைத்தேன் வந்தாய் அப்டேட்: சுடர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்த எழில்.. ராமையாவின் வார்த்தையால் நடந்த ட்விஸ்ட்

Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 24, 2024, 03:10 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்.
  • சுடரையும் குழந்தைகளையும் சுற்றி வளைக்கும் ரவுடிகள்.
  • சுடரை விசாரிக்கும் போலீஸ்.
நினைத்தேன் வந்தாய் அப்டேட்: சுடர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்த எழில்.. ராமையாவின் வார்த்தையால் நடந்த ட்விஸ்ட் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சுடர் குழந்தைகளை கடத்தும் பெண் என போலீஸ் வந்து சொல்ல கனகவல்லி எழிலுக்கு சொல்ல எழில் குழந்தைகளை தேடிச் சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சுடரையும் குழந்தைகளையும் சுற்றி வளைக்கும் ரவுடிகள்

அதாவது சுடர் குழந்தைகளுடன் ஒரு குடோனுக்குள் இருக்க ரவுடிகள் அவளையும் குழந்தைகளையும் சுற்றி வளைக்கின்றனர். அங்கு வரும் எழில் ரவுடிகளை அடித்து போட்டு குழந்தைகளை காப்பாற்ற போலீசும் அங்கு வந்து விடுகிறது. சுடர் குழந்தைகளை கடத்துறாங்க சார் என்று சொல்ல நீயே ஒரு பெரிய கடத்தல் காரி என சுடரை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். எழில் பதில் ஏதும் பேசாமல் நிற்கிறான். அதன் பிறகு குழந்தைகளிடம் இனி தமிழ் உங்களுக்கு கேர் டேக்கர் கிடையாது என சொல்லி வீட்டுக்கு அழைத்து வருகிறான். 

சுடரை விசாரிக்கும் போலீஸ்

பிறகு போலீஸ் எழிலுக்கு போன் போட்டு நேரில் வந்து கம்ப்ளைன்ட் எழுதி தர சொல்ல எழில் குழந்தைகளிடம் எங்களுக்கு தமிழ் யாருமே தெரியாது கொஞ்ச நாளாக தான் அவ இங்க இருக்கா என்று சொல்லணும் என்று ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறான். ஸ்டேஷனில் போலீஸ் சுடரை அடித்து விசாரிக்கின்றனர். 

ஸ்டேஷனுக்கு வரும் எழில் கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுக்க ராமையா அந்த பொண்ணு மேல தப்பு கிடையாது அது குழந்தைகளை தான் காப்பாத்துச்சு என்று சொல்ல எழில் கொஞ்சம் அமைதியா இருங்க என்று சத்தம் போடுகிறான். அஞ்சலி மட்டும் ஜெயிலுக்குள் இருக்கும் சுடரின் கையைப் பிடித்து அழ அவளும் அஞ்சலியை பார்த்து அழுகிறாள். எழில் அஞ்சலியை திட்டி வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறான். 

மேலும் படிக்க | மே10ம் தேதி வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு திரைப்படம்!

ராமையா சொன்னதை கேட்ட போலீஸ் சுடரை கூப்பிட்டு உன்னுடைய உண்மையான பெயர் என்ன நீ எதுக்கு தமிழ் என்ற பெயரில் அந்த வீட்ல இருக்க என்று விசாரிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்ணா தாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News