100 மில்லியன் பார்வைகளை கடந்த சலார் டீசர்... கையோடு வெளியான ட்ரெய்லர் அப்டேட்

Salaar Teaser 100M Views: பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் பிரபாஸின் ‘சலார்’ படத்தின் டீசர் சாதனை ஒன்றை படைத்துள்ளது.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 8, 2023, 02:24 PM IST
  • கே.ஜி.எஃப் இயக்குநர் இயக்கியுள்ள படம் சலார்.
  • பிரபாஸ் ஹீரோவாகவும் பிரித்விராஜ் வில்லனகாவும் நடிக்கின்றனர்.
100 மில்லியன் பார்வைகளை கடந்த சலார் டீசர்... கையோடு வெளியான ட்ரெய்லர் அப்டேட் title=

கேஜிஎஃப் முதல் மற்றும் 2 ஆம் பாகம் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபாஸ்,  ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள சலார் படத்தை ஹம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக சலார் படம் கேஜிஎஃப் படத்தின் தொடர்புடைய படமாக இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகின. இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மறுபுறம் கடந்த ஜூலை 6 ஆம் திகதி அன்று இந்த திரைப்படத்தின் டீசர் அதிகாலை 5.12 மணிக்கு  வெளியானது. சொன்னது போலவே டீசர் சரியாக  அதிகாலை சரியாக 5:12 மணியளவில் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. ஆனால், சில நெட்டிசனங்கள் நன்றாக ஆராய்ந்து இதற்கான பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்துள்ளனர். 

மேலும் படிக்க | வடிவேலு to சூரி-சிரிப்பு நடிகர்களாக இருந்து சீரியஸ் கேரக்டர்களாக மாறிய நகைச்சுவை நாயகர்கள்..!

அதன்படி கே.ஜி.எஃப். இல் இடம்பிடித்த  “8 ஷூ=1 பன்…” டைலாக்கை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருந்தாலும பலருக்கு உணர்வு ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் கே.ஜி.எஃப். இதன் இரண்டாம் பாகம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த படத்தில் காதல் மனைவியை இழக்கும் ராக்கி பாய், கடைசியில் தங்கக்கட்டிகளுடன் கப்பலில் செல்லும் பாேது காவல் படையினரால் சுற்றி வளைக்கப்படுவான். பிறகு கடலில் குதித்து விடுவான். அவர் குதித்த நேரம் சரியாக 5.12 மணி. எனவே சலார் படத்தின் டீசர் நேற்று வெளியான  நேரமும் சரியாக 5.12. இதனால், இந்த இரண்டு படங்களுக்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பதை ரசிகர்கள் கன்ஃபார்ம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வெளியான இரண்டே நாட்களில் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள படக்குழு, கையோடு டிரைலர் அப்டேட்டையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி சலார் திரைப்படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

 

 

மேலும் படிக்க | தொடரும் தமிழக காவல் துறையினரின் தற்கொலைகள்..! என்ன காரணம்..? தீர்வு எப்போது..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News