‘கே.ஜி.எஃப்’ யூனிவர்ஸை உருவாக்கும் கன்னட இயக்குநர்..? ‘சலார்’ படத்தின் பின்னணி என்ன..?

Salaar Teaser Released: ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸ் புதிதாக நடித்துள்ள ‘சலார்’ படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியானது. இந்த படத்தினை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 6, 2023, 12:44 PM IST
  • சலார் படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியானது.
  • இயக்குநர் கே.ஜி.எஃப் யூனிவர்ஸை உருவாக்குகிறாரா?
  • கே.ஜி.எஃப் படத்திற்கு சலார் படத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
‘கே.ஜி.எஃப்’ யூனிவர்ஸை உருவாக்கும் கன்னட இயக்குநர்..? ‘சலார்’ படத்தின் பின்னணி என்ன..?  title=

கே.ஜி.எஃப் படத்தை உருவாக்கி மிகப்பெரிய இக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர், பிரசாந்த் நீல். இவருடைய அடுத்த படைப்பு, சலார். இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் என பல நட்சத்திர பட்டாளங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியானது. 

டீசர் வெளியீடு: 

பெரிய பட்ஜெட் கதாநாயகனாக வலம் வரும் பிரபாஸ், தற்போது நடித்துவரும் படம் சலார். இந்த படம், சுமார் 200 கோடி பொருட்செலவில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் ‘சலார் பகுதி 1 : சீஸ் ஃபயர்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. “சிங்கம், புலி எல்லாமே பயங்கரமான மிருகம்தான்..ஆனால் ஜுராஸிக் பார்கில் அல்ல..” என்ற டைலாக்குடன் தொடங்கிய இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட 8 மில்லியன் வியூஸ்களை நெருங்கியுள்ளது. கே.ஜி.எஃப் படத்தில் இடம் பெற்றிருந்த அதே ப்ளாக்-டிண்ட் வகை காட்சிபொருட்கள் இந்த படத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டீசருக்காக ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்தனர். அதிகாலையில் டீசர் வெளியிடப்படுவதற்கான காரணத்தையும் சிலர் கணித்துள்ளனர். 

மேலும் படிக்க | சினிமாவை விட்டு விலகும் சமந்தா..? ‘அந்த’ பாதிப்புதான் காரணமா..?

அதிகாலையில் டீசர் வெளியானது ஏன்? 

சலார் படத்தின் டீசர், ஜூலை 7 (இன்று) அதிகாலை சரியாக 5:12 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சொன்னது போலவே டீசர் சரியாக இன்று அதிகாலை சரியாக 5:12 மணியளவில் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. ஆனால், சில நெட்டிசனங்கள் நன்றாக ஆராய்ந்து இதற்கான பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்துள்ளனர். 

கே.ஜி.எஃப்-சலார் தொடர்பு..

எந்த வித ஆரவாரமும் இல்லாமல் வெளியாகி அனைத்து பான்-இந்தியா படங்களையும் தூக்கி சாப்பிட்ட படம் கே.ஜி.எஃப். எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் “8 ஷூ=1 பன்…” டைலாக்கை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருந்தாலும பலருக்கு உணர்வு ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் கே.ஜி.எஃப். இதன் இரண்டாம் பாகம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த படத்தில் காதல் மனைவியை இழக்கும் ராக்கி பாய், கடைசியில் தங்கக்கட்டிகளுடன் கப்பலில் செல்லும் பாேது காவல் படையினரால் சுற்றி வளைக்கப்படுவான். பிறகு கடலில் குதித்து விடுவான். அவர் குதித்த நேரம் சரியாக 5.12 மணி. இன்று வெளியாகியுள்ள சலார் படத்தின் டீசர் வெளியாகியுள்ள நேரமும் சரியாக 5.12. இதனால், இந்த இரண்டு படங்களுக்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பதை ரசிகர்கள் கன்ஃபார்ம் செய்துள்ளனர் 

சலார் படத்தின் கதை..

சலார் படத்தில் கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் வரும் நடிகர் பிரபாஸ், உயிரிழக்கும் தருவாயில் இருக்கும் தனது நண்பனிடம் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பதும், அவனது அந்த கதிக்கு காரணமாக இருந்தவர்களை போட்டுத்தள்ளுவதும்தான் கதை என கூறப்படுகிறது. அந்த உயிரிழக்கும் நண்பன்தான் கே.ஜி.எஃப் ராக்கி பாயா? அவன் செய்து கொடுத்த சத்தியம் என்ன? போன்ற பல கேள்விகளும் ரசிகர்களின் மனங்களில் தற்போது எழுந்துள்ளது. இருப்பினும், படம் வெளியான பிறகே முழு கதை தெரியும். 

தொடர் கதை..

சலார் படம், கே.ஜி.எஃப் கதையின் ஸ்பின்-ஆஃப் (Spin-Off) ஆக இருக்கும் என இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு படத்தில் வந்த கதாப்பாத்திரத்தின் கதை இன்னொரு கதையில் தாெடர்வதுதான் ஸ்பின்-ஆஃப். கே.ஜி.எஃப் கதையில் வரும் ராக்கி பாய், உயிரிழந்த பிறகு அவரது கதாப்பாத்திரத்தின் கதை இப்படத்தில் தொடரலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சாதியை வைத்து வாய்ப்பு தருகிறாரா மாரி செல்வராஜ்..? அவரே கொடுத்த விளக்கம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News