சீதா ராமன் அப்டேட்: சுபாஷ், அர்ச்சனாவை பிச்சை எடுக்க வைத்த மகள்கள்.. நான்சியிடம் சிக்கும் சீதா?

Seetha Raman Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 14, 2024, 01:50 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • சீதாவை பின் தொடரும் கூட்டம்.
  • பிச்சைக்கார வேஷம் போட்டு ஃபாலோ செய்ய திட்டம்.
சீதா ராமன் அப்டேட்: சுபாஷ், அர்ச்சனாவை பிச்சை எடுக்க வைத்த மகள்கள்.. நான்சியிடம் சிக்கும் சீதா? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நம்ப வேலை பண்றது நான்சிக்கு தெரியக்கூடாது என்று சீதாவும் மீராவும் பேசிக் கொண்டதை நான்சி கேட்டு விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சீதாவை பின் தொடரும் கூட்டம்

அதாவது சேது, மீரா மற்றும் சீதா என மூவரும் சாப்பிட்டு விட்டு ஆபீஸ்க்கு கிளம்ப தயாராக நான்சி சுபாஷ் மற்றும் அர்ச்சனாவை கூப்பிட்டு இவர்களை பின்தொடர சொல்ல சுபாஷ் இவங்கள ஃபாலோ பண்ணி பண்ண மாட்டிக்குவோம் எங்களால முடியாது என மறுக்கிறார். 

பிச்சைக்கார வேஷம் போட்டு ஃபாலோ செய்ய திட்டம்

உடனே அர்ச்சனா நாம மாறுவேடத்துல பிச்சைக்கார வேஷம் போட்டு ஃபாலோ பண்ணி போகலாம் என்று ஐடியா கொடுக்க நான்சி அர்ச்சனா சொல்றது சரிதான் என்று சொல்ல இருவரும் பிச்சைக்கார வேஷம் போட்டு ராமின் புல்லட்டை எடுத்து கொண்டு பின் தொடர்ந்து செல்கின்றனர். 

இதைப் பார்த்து ராமின் தங்கைகள் மூவரும் யாரோ அண்ணாவோட புல்லட்ட திருடிட்டு போறாங்க என்று இவர்களை பின்தொடர்ந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் சீதா எக்ஸ்போர்ட் கம்பெனியை கண்டுபிடித்து நான்சிக்கு தகவல் கொடுத்து விடுகின்றனர். 

மேலும் படிக்க்க | இன்ஸ்பெக்டர் ரிஷி: மார்ச் 29 தேதி பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்

அதைத்தொடர்ந்து அங்கு வரும் ராம் தங்கைகள் மூவரும் பிச்சைக்காரர்கள் என நினைத்து இவர்களைப் போட்டு அடித்து உதைக்க நாங்க அங்க அப்பா அம்மா தான், நான்சியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப கோவிலில் பிச்சை எடுத்து அதை கோவில் உண்டியலில் போடுவதாக வேண்டிக் கொண்டிருப்பதாக சொல்ல அப்படின்னா வாங்க வந்து பிச்சை எடுங்க என்று கோவில் வாசலில் உட்கார வைத்து பிச்சை எடுக்க வைக்கின்றனர். 

இங்கே ராம் எக்ஸ்போர்ட் கம்பெனியில் மகாவின் போட்டோவை கொண்டு வந்து வைத்து தைத்து முடித்த ஆடைகளின் தரத்தை செக் செய்ய தொடங்குகிறான். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்! முழு லிஸ்ட்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News