மும்பை ரொம்ப மோசம்... இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல... சன்னி லியோன் சொன்னது என்ன?

Sunny Leone: மும்பையில் தனது ஆரம்ப காலக்கட்டம் குறித்தும் மழைக்காலம் குறித்தும் சன்னி லியோன் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துகொண்டார். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 11, 2023, 05:38 PM IST
  • வானத்தில் இருந்து அவ்வளவு மழையா பெய்யும் என ஆச்சர்யப்பட்டேன் - சன்னி
  • மூன்று கார்களை மழைக்காலத்தில் காவு கொடுத்தேன் - சன்னி
  • அதுவும் ஒரே நாள்களில் இரண்டு கார்கள் - சன்னி
மும்பை ரொம்ப மோசம்... இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல... சன்னி லியோன் சொன்னது என்ன? title=

Sunny Leone: மும்பை மழை உடனான தனது முதல் அனுபவத்தை நினைவுகூர்ந்த நடிகை சன்னி லியோன், ஒரு கனமழை காலத்தில் தனது மூன்று விலை உயர்ந்த கார்களை இழந்ததாக தெரிவித்தார். ஊடகம் ஒன்றில் பேசிய சன்னி லியோன், மும்பை மழை குறித்து முதலில் தனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றார். 

சன்னி லியோன் கேலியாக, "வானத்தில் இருந்து அவ்வளவு மழையா பெய்யும்!" என்றார். அவர் தொடர்ந்து, மும்பையின் பருவமழை மீதான தனது அன்பைப் பகிர்ந்து கொண்டார். "நான் மும்பையில் வசித்தேன், குறிப்பாக, கடல் பகுதிக்கு அருகில் இருந்தேன். நான் வேலைக்காக இந்தியாவுக்கு வந்தபோது, என் சுவர்களில் நீர் கசியத் தொடங்கியது. வீடு முழுவதும் ஈரமாகவே இருந்தது. ஆனால் நான் அந்த வானிலையை விரும்பினேன்! பருவமழை என்பது வருடத்தில் எனக்கு மிகவும் பிடித்த காலங்களில் ஒன்றாகும். அப்போது, லேசாக குளிர்ச்சியாக இருக்கும். வெளியே போக முடியாது என்றாலும் மழை பெய்யும்போது நான் மகிழ்ச்சியாக உணர்வேன். 

பின்னர் சன்னி லியோன் மழைக்காலங்களில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தையும் நினைவு கூர்ந்தார். அதாவது, தான் மூன்று விலை உயர்ந்த கார்களை இழந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். "மழையால் நான் மூன்று நல்ல கார்களை இழந்துவிட்டேன், அதுவும் ஒரே நாளில் இரண்டு கார்கள். அது மிகவும் பயங்கரமானது, நான் அழுது கொண்டிருந்தேன்.

மேலும் படிக்க | ஓடிடியில் வெளியானது ‘ஆதிபுருஷ்’ திரைப்படம்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

ஏனென்றால் நீங்கள் இறக்குமதி செய்யப்பட்ட கார்களை வாங்கும்போது நீங்கள் அதற்கு அதிகமான வரி செலுத்துகிறீர்கள். மேலும், அதில் ஒன்று எட்டு இருக்கைகள் கொண்ட மெர்சிடிஸ் டிரக். நான் மகிழ்ச்சியாக இல்லை, ஆனால் பரவாயில்லை, இதுபோன்ற விஷயங்கள் நடப்பதுதான். நாம் பொருள் சார்ந்த விஷயங்களை மாற்றலாம், யாரும் காயமடையவில்லை என்பது வரை பரவாயில்லை. நான் அப்போது தவறான காரை வாங்கினேன், இப்போது எனது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களையே நான் விரும்புகிறேன்," என்றார். 

பருவமழை தனது தொழில்முறை கடமைகளுக்கு இடையூறாக இல்லை என்று சன்னி பகிர்ந்து கொண்டார், "நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் மருத்துவமனையில் உடல் ரீதியாக தடுத்து வைக்கப்படாவிட்டால், அல்லது எனக்கோ அல்லது என் குழந்தைகளுக்கோ ஏதாவது பிரச்சனை இல்லாவிட்டால், நான் எப்போதும் நடிக்கச் சென்றுவிடுவேன்" என்றார். 

சன்னி தற்போது விரைவில் வெளிவர இருக்கும் தமிழ் திரைப்படமான Quotation Gang இல் காணப்படுவார். விவேக் கே. குமாரின் இயக்கத்தில் ஜாக்கி ஷெராஃப், பிரியாமணி, சாரா அர்ஜுன், வி. ஜெயபிரகாஷ், விஷ்ணு வாரியர் மற்றும் பலரும் சன்னி லியோன் உடன் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரன்ஜீத் கவுர் வோஹ்ரா என்ற இயற்பெயரை கொண்ட சன்னி லியோன் மிகவும் பிரபலமான நடிகையாவார். கனடாவில் பிறந்த இந்திய-அமெரிக்க பெண்ணான அவர் மாடலாகவும் உள்ளார். தற்போது இந்தியத் திரையுலகில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் ஒரு முன்னாள் ஆபாச நட்சத்திரம் ஆவார். கரேன் மல்ஹோத்ரா என்றும் இவரை அழைக்கின்றனர். கனடாவின் ஒன்டாரியோ சீக்கிய பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர், சன்னி லியோன்

மேலும் படிக்க | ஒரே நாளில் இத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸா..! எந்த தளத்தில் பார்ப்பது..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News