மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கழுவி ஊற்றிய ஜெயமோகன்! விமர்சனமா? வன்மமா?

Jeyamohan criticizes Manjummel Boys Malayalam Movie Latest News : பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ள விவகாரம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Mar 9, 2024, 02:04 PM IST
  • மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த ஜெயமோகன்
  • “குடிப்பொறுக்கிகள்” என சிலரை குறிப்பிட்டிருக்கிறார்
  • படத்தின் விமர்சனமா? மலையாளிகள் மீது வன்மமா?
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கழுவி ஊற்றிய ஜெயமோகன்! விமர்சனமா? வன்மமா? title=

Jeyamohan criticizes Manjummel Boys Malayalam Movie Latest News : சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான படம், மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம், கேரளா மற்றும் தமிழகத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதை தொடர்ந்து, எழுத்தாளர் ஜெயமோகன், இது குறித்த கடும் விமர்சனத்தை தனது கட்டுரையில் எழுதியிருக்கிறார். அவர் அப்படி என்ன கூறினார்? இதாே முழு விவரம்.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த ஜெயமோகன்..

மஞ்சுமெல் பாய்ஸ் படம், கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகியிருந்த நிலையில் தற்போது வசூலிலும் விமர்சனத்திலும் இப்படம் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த படத்தை பார்த்த பலரும் பாசிடிவான விமர்சனங்களை மட்டுமே கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, இப்படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையில் எழுதியுள்ளார். அவர் பின்வருமாறு தனது கட்டுரையில் கூறியிருக்கிறார்:

“சமகால சினிமாவை தான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி” என்று கூறியிருக்கிறார். 

மேலும், யானை டாக்டர் எழுதியவன் என்னும் முறையில் இதை எழுதவேண்டியிருந்ததாக கூறியுள்ள அவர், புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துக்கள் வழியாக நேற்று மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தததாக தெரிவித்திருக்கிறார். 

தொடரும் அவரது கட்டுரையில் அவர் மேலும் மஞ்சுமல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார். “மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் தமிழில் வந்திருந்தால் இங்குள்ள எளிய விமர்சகர்கூட ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்கள். அதெப்படி தமிழ் நாளிதழ்களில் செய்திவெளிவந்த அவ்வளவு பெரிய இடர், ஒரு வீர சாதனை கேரளத்தில் அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் தெரியாமலேயே இருந்தது. மஞ்ஞும்மல் பையன்கள் அதை ஊரில் சொல்லவே இல்லையா? அது ஒருவன் இன்னொருவனுக்காக உயிர்கொடுக்கத் துணிந்த தருணம், அதை அப்படியே மூழ்கடித்து வைத்தார்களா என்ன? நாட்கணக்கில்கூட செய்தி கசியவில்லையா? கிளைமாக்ஸ் நெகிழ்ச்சிக்காக சமையல் செய்து உருவாக்கப்பட்ட காட்சி அது. ஆனால் மல்லுபடம் என்றால் அது ரியலிசம் என்பார்கள் நம்மூர் அரைவேக்காடுகள்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | #Metoo சர்ச்சையில் சிக்கிய ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ இயக்குநர்! நடிகையிடம் தவறாக நடந்து காெண்டாரா?

மலையாளிகள் குறித்து கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஜெயமோகன்..

ஜெயமோகன், தனது கட்டுரையில் மேலும் பல விஷயங்களை கூறியிருக்கிறார். தென்னகத்திற்கு டூர் வரும மலையாளிகள் எப்போதும் குடியும் கும்மாளமுமாக இருப்பதாகவும், தமிழக காடுகளுக்குள் இவர்கள் குடித்து விட்டு போடும் பாட்டில்களால் மிருகங்கள் பாதிப்படைவதாகவும் கூறியிருக்கிறார். குடியை அவர்களது சினிமாவில் “ஜாலி” என்ற பெயரில் நார்மலைஸ் செய்து வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். குறிப்பாக, தனது கட்டுரையில் அவர் மலையாளிகளை “பொறுக்கிகள்” என குறிப்பிட்டிருக்கிறார். மேலும், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் தமிழகப்போலீஸ் அவர்களை நடத்தும் விதமும் உண்மையானது. அடி தவிர எதுவுமே இவர்களுக்குப் புரிவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

மலையாளிகள் மீது வன்மமா? 

எழுத்தாளர் ஜெயமோகன், தனது கட்டுரை முழுவதுமாக மலையாள சினிமாவையும் மலையாளிகளையும் குத்தம் சொல்லும் பாணியிலேயே எழுதியிருப்பதாக அக்கட்டுரையை படித்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதில், அவர் படத்தை விமர்சிப்பதை தாண்டி மலையாளிகளின் நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கும் என பொத்தாம் பொதுவாக ஒரு பிம்பத்தை உருவாக்குவது பாேல எழுதியுள்ளதாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். உண்மையில், இவரே கேரள மாநிலத்தை சேர்ந்தவர்தான் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. 

மேலும் படிக்க | நயனை Wine உடன் ஒப்பிட்ட விக்னேஷ் சிவன்..வைரலாகும் போட்டோக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News