எப்போது வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்?... உறுதிப்படுத்தினார் தமன்

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகுமென்று இசையமைப்பாளர் தமன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 19, 2022, 06:26 PM IST
  • வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸ்
  • படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது
  • ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு குறித்து பேசியிருக்கிறார் தமன்
எப்போது வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்?... உறுதிப்படுத்தினார் தமன் title=

நடிகர் விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதற்கிடையே வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர் வம்சி, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என கண்டிஷன் போட்டார். 

படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாக சமீபத்தில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இசையமைப்பாளர் தமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி என்று குறிப்பிட்டிருந்தார்.

Vijay

இதனைக் கண்ட நெட்டிசன்கள் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாவதைத்தான் தமன் இவ்வாறு கூறியிருக்கிறார் என பதிவிட்டுவந்தனர். 

இந்நிலையில் அந்தத் தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.நேற்று ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சிவகார்த்திகேயன் மற்றும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுடன் 'பிரின்ஸ்' படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட தமன், இந்த தீபாவளிக்கு ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்பதை உறுதி செய்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளன.

 

முன்னதாக, விஜய்யின் வாரிசு படம் ரிலீஸாவதற்கு முன்னரே 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. படத்திற்கான தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம், பாடல்களுக்கான உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் என 180 கோடி ரூபாய்க்கு வியாபரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மேலும் படிக்க | திரில்லர் ஜானரில் ஜிவி பிரகாஷ்; நாளை டீசர் அப்டேட்

ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாகவும், சாட்டிலைட் உரிமம் 50 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் ரைட்ஸ் 60 கோடி ரூபாய்க்கும், பாடல்கள் 10 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் பேசப்படுகிறது. வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News