வினோத் சாந்திலால் அதானி என்ற பணக்கார ’NRI’; கோடிகளில் தினசரி வருமானம்!

ஹுரூன் வெளியிட்டுள்ள பட்டியலில், கௌதம் அதானியின் சகோதரர் வினோத் சாந்திலால் அதானி, வெளிநாடு வாழ் இந்தியர்களில் பணக்காரர்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 24, 2022, 08:54 PM IST
  • வினோத் சாந்திலால் அதானியின் தினசரி வருமானம் ரூ.102 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஹிந்துஜா பிரதர்ஸ் ரூ.1.65 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
  • ஆர்சிலர் மிட்டலின் லட்சுமி நிவாஸ் மிட்டல் 1.5 லட்சம் கோடி சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
வினோத் சாந்திலால் அதானி என்ற பணக்கார ’NRI’; கோடிகளில் தினசரி வருமானம்! title=

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். IIFL Wealth Hurun India Rich List 2022 என்ற பணக்காரர்கள் பட்டியலில், கௌதம் அதானியின் தினசரி வருவாய் ரூ.1612 கோடி. இந்நிலையில், ஹுரூன் வெளியிட்டுள்ள பட்டியலில், கௌதம் அதானியின் சகோதரர் வினோத் சாந்திலால் அதானி, வெளிநாடு வாழ் இந்தியர்களில் பணக்காரர்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

கௌதம் அதானியின் சகோதரர் வினோத் சாந்திலால் அதானி துபாயில் வசித்து வருகிறார். மேலும் துபாய், ஜகார்த்தா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தொழிலதிபராக உள்ளார். கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.37,400 கோடி  என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் வினோத் சாந்திலால் அதானி ஆறாவது இடத்தில் உள்ளார். இது தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 850 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1.69 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதானி சகோதரர்கள் இருவரின் சொத்துக்களையும் சேர்த்தால், மொத்தம்  ரூ.16.63 லட்சம் கோடி என்ற அளவில் சொத்து மதிப்பு உள்ளது.  ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 பேரின் சொத்து மதிப்பில் 40 சதவீதம் உள்ளது.சாந்திலால் அதானியைப் பற்றிப் குறிப்பிடுகையில், 2022ம் ஆண்டிற்கான ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் மொத்தம் 94 பணக்கார வெளிநாடு வாழ் இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இதில் வினோத் சாந்திலால் அதானியின்  தினசரி வருமானம் ரூ.102 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஹிந்துஜா பிரதர்ஸ் ரூ.1.65 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இதைத் தொடர்ந்து ஆர்சிலர் மிட்டலின் லட்சுமி நிவாஸ் மிட்டல் 1.5 லட்சம் கோடி சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும் படிக்க | நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்கள் அனைத்தும் ஆண்டு இறுதிக்குள் பரிசீலிக்கப்படும்: கனடா 

வினோத் சாந்திலால் அதானி 1976 ஆம் ஆண்டு பிவாடியில் விஆர் டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து விசைத்தறியை நிறுவி தனது தொழில் பயணத்தைத் தொடங்கினார். இதையடுத்து சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்த அவர், 1994ல் துபாயில் வசிக்கத் தொடங்கி வளைகுடா நாடுகளில் தனது தொழிலை விரிவுபடுத்தினார். துபாயில், சர்க்கரை, எண்ணெய், அலுமினியம், தாமிரம் மற்றும் இரும்பு  போன்றவை தொடர்பான  தொழில்களை செய்து வருகிறார். 

மேலும் படிக்க | வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது RBI: இனி அங்கிருந்தே இதை செய்யலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News