மற்றுமொரு கொடூரக் கொலை: இந்தியப் பெண்ணை கொன்று தலையை வெட்டிய பங்களாதேஷ் காதலன்

Murder By Lover: டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் காதலனால் கொல்லப்பட்டு துண்டு துண்டாக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவராத நிலையில், அதேபோல மற்றுமொரு சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2022, 09:22 PM IST
  • காதலியை கொலை செய்த மற்றுமொரு காதலன்
  • பெண்ணை துண்டு துண்டாக்கி விட்டு தப்பியோடிய காதலன்
  • போலீசாரின் விசாரணையில் கொலையை ஒப்புக் கொண்ட கொடுர காதலன்
மற்றுமொரு கொடூரக் கொலை: இந்தியப் பெண்ணை கொன்று தலையை வெட்டிய பங்களாதேஷ் காதலன் title=

டாக்கா: டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் காதலனால் கொல்லப்பட்டு துண்டு துண்டாக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவராத நிலையில், அதேபோல மற்றுமொரு சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபுபக்கர் என்பவர், கவிதா ராணி என்ற பெண்ணைக் கொன்று துண்டு துண்டாக வெட்டினார். இந்த வழக்கு, மே 18 அன்று டெல்லியில் ஆப்தாப் அமீன் பூனாவாலாவால் கழுத்தை நெரித்து 35 துண்டுகளாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா வால்கரின் கொலையைப் போலவே இருப்பதும் வினோதமான ஒற்றுமையாக இருக்கிறது. கவிதா ராணியின் கொலை இந்தியாவில் அல்ல, வங்கதேசத்தில் நடைபெற்றிருக்கிறது.

வங்கதேசத்தின் குல்னா மாவட்டத்தில் உள்ள சோனடங்கா என்ற இடத்தில் வசிப்பவர் அபுபக்கர். நவம்பர் 6 ஆம் தேதி, அபு பக்கர் வேலைக்கு வரவில்லை என்பதால், சக ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியாததால், அவர் பணியாற்றிய போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளர் பக்கரின் வீட்டிற்கு ஒருவரை அனுப்பி வைத்தார். 

கதவு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்த போதிலும், அபுபக்கர் காணாமல் போனதில் சந்தேகம் அதிகரித்ததால், வீட்டு உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸார் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, ​​பெட்டியில் தலையில்லாத பெண் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெண்ணின் தலை வெட்டப்பட்டு பாலிதீனில் சுற்றப்பட்டு இருந்தது. சடலத்தில் கைகளும் இல்லை. பங்களாதேஷின் ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் (RAB) மேற்கொண்ட விசாரணையில், துண்டு துண்டாக சடலமாக இருந்தவர் இந்தியாவை சேர்ந்த கலிபாட் பச்சரின் மகள் கவிதா ராணி என அடையாளம் காணப்பட்டார்.

மேலும் படிக்க: Delhi Murder Case: கடும் தண்டனையில் இருந்து தப்பிக்க அப்தாப் போடும் மெகா பிளான்

வங்கதேச போலீசார் துரிதமாக விசாரணை மேற்கொண்டு நவம்பர் 7 ஆம் தேதி, அபு பக்கரை அவரது லைவ்-இன் பார்ட்னர் சப்னாவுடன் கைது செய்தனர். அபு பக்கரும் சப்னாவும் கோபர்சகா சதுக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனர்.

சமீபத்தில், அபுபக்கர் கவிதாவுடன் நெருக்கமாகிவிட்டார், கொலைக்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். நவம்பர் 5ஆம் தேதி, சப்னா வேலைக்குச் சென்றிருந்தபோது, ​​கவிதாவை அபுபக்கர் தான் குடியிருந்த வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால், அபுபக்கர் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதால், அவருக்கு திருமணமாகிவிட்டதா என்று கவிதா கேட்டிருக்கிறார். இந்த உரையாடல், ஒரு கட்டத்தில் வாக்குவாதவாதமாக மாற, கோபத்தில் கவிதாவின் கழுத்தை நெரித்த அபுபக்கர் அவரை கொன்றுவிட்டார். பிறகு சடலத்தை உடலிலிருந்து துண்டித்த அபுபக்கர், கவிதாவின் உடலில் இருந்து கைகளை வெட்டிவிட்டார்.

மேலும் படிக்க: Delhi Murder : பிரிட்ஜில் பழைய காதலி... புது காதலியுடன் வீட்டிற்கு வந்த அப்தாப்.

இந்த கொலை செய்த இரவே, அபு பக்கர், சப்னாவையும் அழைத்துக் கொண்டு டாக்காவிற்குப் புறப்பட்டுவிட்டார். இந்த விவரங்கள் அனைத்தும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் மறுநாள் கவிதா ராணியின் உடல் அபு பக்கரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நவம்பர் 6 ஆம் தேதி இரவு, அபு பக்கரின் இருப்பிடத்தை காவல்துறை மற்றும் RAB உளவுத்துறை கண்டுபிடித்தது. பின்னர் அவரும் சப்னாவும் காஜிபூர் மாவட்டத்தின் பாசன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சௌரஸ்தா பகுதியில் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை சோனாடங்கா காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அபுபக்கர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நகரின் கோபர்சகா பகுதியில் உள்ள ஒரு குறுகிய இடத்தில் இருந்து பாலிதீனில் சுற்றப்பட்ட கவிதாவின் துண்டிக்கப்பட்ட கைகளை RAB மீட்டெடுத்தது.

மேலும் படிக்க: கொடூர கொலையை நினைவுபடுத்திய டெல்லி சம்பவம்! மனைவியை 72 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News