NRI NEWS: கனடாவில் வேலை தேடுகிறீர்களா.. உங்களுக்கான Good News இதோ!

Job Vacancy in canada: கனடாவில் அனைத்து துறைகளிலும் கிட்டத்தட்ட  10  லட்சம் வேலை காலியிடங்கள் உள்ளன என சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 26, 2022, 04:42 PM IST
  • சில்லறை வர்த்தகம், கட்டுமானம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் வேலை காலியிடங்கள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.
  • தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் துறையில் காலியிடங்கள் இரண்டாவது காலாண்டில் 12.7% உயர்ந்து 149,600 என்ற அளவில் காலியிங்கள் உள்ளது.
NRI NEWS: கனடாவில் வேலை தேடுகிறீர்களா.. உங்களுக்கான Good News இதோ! title=

கனடாவில் அனைத்து துறைகளிலும் கிட்டத்தட்ட  10  லட்சம் வேலை காலியிடங்கள் உள்ளன என சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. கனடாவின் வேலை வாய்ப்பு மற்றும் ஊதிய ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில்,  2022ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில்,  இரண்டாவது காலாண்டில் வேலை காலியிடங்கள் எண்ணிக்கை  4.7% உயர்ந்துள்ளன. மேலும், இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டை விட 42.3% அதிகமாகும். கனடாவில் உள்ள நிறுவனங்கள் முதலாளிகள், 997,000 காலி பணியிடங்களை நிரப்ப தீவிரமாக முயன்று வருகின்றனர் .

2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து, தொழிலாளர் தேவையின் வளர்ச்சி (+4.2%) என்பது  மற்ற வகை வேலைகளின்  (+1.7%) வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது, இதன் விளைவாக அதிக வேலை காலியிடங்கள் பதிவாகியுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

ஆறு மாகாணங்களில் வேலை வாய்ப்புகள் பெருமளவு அதிகரித்துள்ளன:

ஒன்டாரியோ (+6.6% அதாவது 379,700 )
நோவா ஸ்கோடியா (+6.0% அதாவது 22,400 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது)
பிரிட்டிஷ் கொலம்பியா (+5.6% அதாவது 163,600 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது)
மனிடோபா (+5.2% அதாவது 29,300 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது)
ஆல்பர்ட்டா (+4.4% அதாவது 100,900 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது)
கியூபெக் (+2.4% அதாவது 248,100 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது)
நியூ பிரன்சுவிக்கில் (-6.1% அதாவது 15,200 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது) 

மேலும் படிக்க | NRI News: கனடாவில் குடியேற விரும்புவர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி!

சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக உதவி ஆகியவற்றில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. அதே போன்று, தொழில்முறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சேவைகளிலும் காலியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள டொராண்டோ, கியூபெக்கில் உள்ள மாண்ட்ரீல் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லோயர் மெயின்லேண்ட் - தென்மேற்கு (இதில் வான்கூவரை உள்ளடக்கியது) ஆகியவற்றின் பொருளாதாரப் பகுதிகளில் 2022ம் இரண்டாம் காலாண்டில், மேலே கூறிய துறைகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன.

தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் துறையில் காலியிடங்கள் இரண்டாவது காலாண்டில் 12.7% உயர்ந்து 149,600  என்ற அளவில் காலியிங்கள் உள்ளது. உணவு கவுண்டர்கள், சமையலறை உதவியாளர்கள் மற்றும் உணவுத் துறை தொடர்புடைய உதவித் தொழில்கள், சமையல்காரர்கள் மற்றும் உணவு மற்றும் பானங்கள் சப்ளையர்கள் உள்ளிட்ட வேலைகளுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது.

எனினும், சில்லறை வர்த்தகம், கட்டுமானம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் வேலை காலியிடங்கள்  பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

2021 இன் இரண்டாவது காலாண்டில் அனைத்து துறைகளிலும் சராசரி மணிநேர ஊதியம் 5.3% அதிகரித்துள்ளது என்றும் அறிக்கை கண்டறிந்துள்ளது. ஊதியம் தற்போது ஒரு மணி நேரத்திற்கு $24.05 ஆக உள்ளது.

மேலும் படிக்க | NRI News: கனடா நாட்டின் திறமைக்கான ஆதாரமாக மாறி வரும் இந்தியா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News