அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு அதிர்ச்சி: விமான கட்டணங்கள் உயர்கின்றன!!

UAE-India Travel: இந்த மாற்றம் குறித்த செய்தி வெளியானதில் இருந்து, இந்தியாவில் பல இடங்களுக்கான விமான கட்டணம் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக உள்ளூர் டிராவல் ஏஜென்ட்கள் கூறுகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 21, 2023, 05:25 PM IST
  • இந்தியாவுக்குப் பயணம் செய்ய விரும்புபவர்கள் மார்ச் 26 முதல் சில இடங்களுக்கு செல்ல முன்பை விட அதிக தொகை செலுத்தவேண்டி வரக்கூடும்.
  • இந்த கோடைகாலத்தில் இந்தியாவுக்கு பயணிக்க விரும்புபவர்கள் டிக்கெட்டுகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்
  • பயண முகவர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பில், விமானங்களின் புதிய அட்டவணையைப் பகிர்ந்துள்ளது.
அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு அதிர்ச்சி: விமான கட்டணங்கள் உயர்கின்றன!!  title=

அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!! இந்தியாவுக்குப் பயணம் செய்ய விரும்புபவர்கள் மார்ச் 26 முதல் சில இடங்களுக்கு செல்ல முன்பை விட அதிக தொகை செலுத்தவேண்டி வரக்கூடும். ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தங்கள் நெட்வொர்க்கை சீரமைப்பதால் கோழிக்கோடு, இந்தூர் மற்றும் கோவாவுக்குச் செல்லும் பல ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மாற்றப்படுகின்றன. இதுவே கட்டன ஏற்றத்துக்கு காரணமாகும். 

ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் பி.பி. சிங், இது முற்றிலும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார். ‘நாங்கள் பல்வேறு விதமான முயற்சிகளை பற்றி ஆராய்ந்தோம். தலைமையகம் செய்த முடிவின் அடிப்படையில், எங்கள் குழு விமானங்களை மறுசீரமைத்துள்ளனர். நாங்கள் டெல்லி மற்றும் மும்பைக்கு அதிக விமானங்களை இயக்குவோம்.’ என்று அவர் தெரிவித்தார்.

இந்த மாற்றம் குறித்த செய்தி வெளியானதில் இருந்து, இந்தியாவில் பல இடங்களுக்கான விமான கட்டணம் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக உள்ளூர் டிராவல் ஏஜென்ட்கள் கூறுகிறார்கள். இந்த கோடைகாலத்தில் இந்தியாவுக்கு பயணிக்க விரும்புபவர்கள் டிக்கெட்டுகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஏஜெண்டுகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், சக்கர நாற்காலியில் பயணிப்பவர்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஒரே இந்திய விமானம் ஏர் இந்தியா மட்டுமே என்பதால், குறைந்த இயக்கம் கொண்ட பயணிகளுக்கு இது மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | கனடாவில் தாக்கப்பட்ட சீக்கிய மாணவர்! தலைப்பாகையைக் கிழித்து அத்துமீறல்!

ஏர் இந்தியா, பயண முகவர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பில், விமானங்களின் புதிய அட்டவணையைப் பகிர்ந்துள்ளது:

பயணிகளுக்கு ஏமாற்றம் 

ஏர் இந்தியாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளூர் பயண முகமைகள் கூறியுள்ளன. டெய்ரா டிராவல்ஸின் பொது மேலாளர் சுதீஷ், "ஏர் இந்தியா பல்வேறு பகுதிகளிலிருந்து, குறிப்பாக கேரளாவில் இருந்து மெதுவாக விலகி வருகிறது.” என்று கூறினார். ஏற்கனவே கண்ணூர் மற்றும் திருவனந்தபுரத்திற்கான விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கோழிக்கோட்டிற்கான விமானங்களும் தற்போது மார்ச் 25 முதல் நிறுத்தப்படவுள்ளன. 

‘இது இந்திய சமூகத்திற்கே பின்னடைவாக இருக்கும் என்று பலர் கருதுகிறார்கள். சக்கர நாற்காலிகளை எடுத்து செல்லக்கூடிய பெரிய சரக்கு திறன் கொண்ட ஒரு முழு-சேவை கேரியருக்கு பதிலாக, சிறிய, குறைந்த விலை கேரியர்கள் வருகின்றன. ஒரு முழு சேவை கேரியர் அதிக நெகிழ்வுத்தன்மையையும் அனுமதிக்கிறது. இது நிச்சயமாக இந்த கோடை மற்றும் அதற்குப் பிறகு டிக்கெட் விலையை அதிகரிக்கும்’ என்று பயண முகவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

இந்த மாத தொடக்கத்தில், ஏர் இந்தியா கொச்சிக்கான விமானங்களை ட்ரீம்லைனர் விமானங்களில் இருந்து சிறிய A321 விமானமாக மாற்றியது. இந்த தகவலை ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். "நாங்கள் அந்த ட்ரீம்லைனர் விமானங்களை மும்பை மற்றும் டெல்லி வழித்தடங்களுக்கு மாற்றியுள்ளோம்” என நிறுவனம் தெரிவித்தது. 

இதனால பல சாதகமற்ற விளைவுகள் ஏற்படும் என பயண முகவர்கள் கருதுகிறார்கள். "இப்போது, பிசினஸ் கிளாஸ் அல்லது முதல் வகுப்பில் கொச்சிக்கு பயணம் செய்ய விரும்புவோர் எமிரேட்ஸில் மட்டும்தான் பயணிக்க முடியும்," என்று அவர்கள் கூறுகிறார்கள்.  

2022 ஜனவரியில்தான் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, விமான நிறுவனத்திற்குள் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வு சேவைக்கான (வாலண்டரி ரிடயர்மெண்ட் சர்வீஸ்) விருப்பம் அளிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் புதிய விமானங்களுக்கான மகத்தான பல ஆர்டர்கள் அளிக்கப்பட்டன. 

மேலும் படிக்க | பெல்ஜியம் குடிமகனான பிறகும் இந்திய பாஸ்போர்டை பயன்படுத்திய நபர் இந்தியா வர தடை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News