UAE Labour Laws:அமீரகத்தில் பணிபுரிபவர்கள் முன்னறிவிப்பின்றி ராஜினாமா செய்ய முடியுமா?

UAE Labour Laws: உங்கள் பணிச்சூழலில் நீங்கள் மகிழ்ச்சியடையாத காரணத்தினாலோ அல்லது அவசரநிலை ஏற்பட்டாலோ உடனடியாக வேலையை ராஜினாமா செய்ய நீங்கள் திட்டமிட்டால், சில முக்கிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2022, 02:44 PM IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களுக்கு முன்னறிவிப்பின்றி ராஜினாமா செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
  • எனினும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே இதை செய்ய முடியும்.
  • அதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
UAE Labour Laws:அமீரகத்தில் பணிபுரிபவர்கள் முன்னறிவிப்பின்றி ராஜினாமா செய்ய முடியுமா? title=

துபாய்: அமீரகத்தில் பணியில் உள்ளவர்கள் எப்போதும் கண்டிப்பாக மனதில் கொள்ளவேண்டிய சில தொழிலாளர் விதிகள் உள்ளன. உங்கள் பணிச்சூழலில் நீங்கள் மகிழ்ச்சியடையாத காரணத்தினாலோ அல்லது அவசரநிலை ஏற்பட்டாலோ உடனடியாக வேலையை ராஜினாமா செய்ய நீங்கள் திட்டமிட்டால், சில முக்கிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களுக்கு முன்னறிவிப்பின்றி ராஜினாமா செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. எனினும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே இதை செய்ய முடியும். 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 45 - ஃபெடரல் ஆணை-சட்டம் எண். 33 2021 - அறிவிப்பின்றி பணிநீக்கம் செய்ய தொழிலாளிக்கு உரிமை உள்ள நான்கு குறிப்பிட்ட சாத்தியக்கூறுகளைப் பற்றி கூறுகிறது. வேறு எந்த சூழ்நிலையிலும், முன்னறிவிப்பின்றி ராஜினாமா செய்வது, உங்கள் முதலாளிக்கு நிதி இழப்பீடு செலுத்த சட்டப்பூர்வமாக உங்களை பொறுப்பாக்குகிறது.

அறிவிப்பு இல்லாமல் ராஜினாமா செய்யக்கூடிய நான்கு சாத்தியக்கூறுகள்

பிரிவு 45 இன் படி, பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு தொழிலாளி முன்னறிவிப்பின்றி ராஜினாமா செய்யலாம்:

1. தொழிலாளர் சட்டம், அதன் நிர்வாகத் தீர்மானங்கள் அல்லது உங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  உரிமைகளை முதலாளி மீறினால், முன்னறிவிப்பின்றி ராஜினாமா செய்யலாம். எனினும், நீங்கள் ராஜினாமா செய்வதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னர் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்திற்கு (MOHRE) தெரிவிக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் மற்றொரு நிபந்தனையையும் சட்டம் கூறுகிறது - MOHRE மூலம் நிலைமையை சரிசெய்ய முதலாளி தவறியிருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இந்த நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டால், ஆர்டிகல் பிரிவு 1 இன் படி, அறிவிப்பு இல்லாமல் ராஜினாமா செய்ய உங்களுக்கு உரிமை உண்டு.

மேலும் படிக்க | NRI News: அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமா?

2. தொழிலாளி முதலாளி அல்லது முதலாளியின் சட்டப் பிரதிநிதியால் தாக்கப்பட்டால். இந்த சூழலில்,  நீங்கள் சம்பவத்தைப் புகாரளிக்க முடிந்த நாளிலிருந்து ஐந்து வேலை நாட்களுக்குள் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கும் MOHRE க்கும் தெரிவிக்க வேண்டும்.

3. பணியிடமானது ஒரு தொழிலாளியின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை விளைவித்தால் மற்றும் முதலாளி அதை அறிந்திருந்தும் நிலைமையை சரிசெய்யத் தவறினால்.

4. வேலை ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட வேலையிலிருந்து அடிப்படையில் வேறுபட்ட மற்றும் ஒப்புதல் அளிக்காத பணிகளைச் செய்யும்படி உங்களிடம் கேட்கப்பட்டால். இருப்பினும், இந்த விதிக்கு சில விதிவிலக்குகள் உள்ள. அவை ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 12 இல் விளக்கப்பட்டுள்ளன. 

பிரிவு 45 இன் எந்த சூழ்நிலையும் நீங்கள் ராஜினாமா செய்ய வழிவகுத்த சூழலுக்கு பொருந்தவில்லை என்றால், உங்கள் முதலாளிக்குத் தெரிவிக்கும் அறிவிப்பை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஐக்கிய அரபு எமிரேட் தொழிலாளர் சட்டத்தின் 43 வது பிரிவின்படி, ஒரு முழுநேர ஊழியர், தங்கள் வேலையை ராஜினாமா செய்ய விரும்பினால், 30 முதல் 90 நாட்களுக்குள் அறிவிப்புக் காலத்தை ( நோடிஸ் போரியட்) வழங்க வேண்டும். உங்கள் வேலை ஒப்பந்தத்தில் உங்கள் முதலாளிக்கு வழங்க வேண்டிய அறிவிப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். 

மேலும் படிக்க | NRI வீட்டில் வாடகைக்கு உள்ளீர்களா? இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News