நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்கள் அனைத்தும் ஆண்டு இறுதிக்குள் பரிசீலிக்கப்படும்: கனடா

விசா விண்ணப்பங்கள் தொடர்ந்து குவிந்து வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 2.7 மில்லியன் விசா விண்ணப்பங்கள் வரலாம் என கனடா எதிர்பார்க்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 21, 2022, 08:18 PM IST
  • னடா மாணவர் விசாக்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
  • இந்தியாவில் இருந்து 230,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கனடாவில் உள்ள இரண்டாம் நிலை கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்கள் அனைத்தும் ஆண்டு இறுதிக்குள் பரிசீலிக்கப்படும்: கனடா title=

கனடா உயர் படிப்புக்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கனடா பல்கலைக்கழகங்களில் கலவி கற்க செல்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வி, வலுவான உள்கட்டமைப்பு, அதிநவீன பாடத்திட்டங்கள், பரந்து விரிந்த வளாகங்கள் என கண்டா கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் சிறந்த தேர்வாக திகழ்கிறது. இந்தியாவில் உள்ள பல மாணவர்கள், கனடாவில் உள்ள கல்லூரிகளில் கல்வியை தொடர படிப்பிற்கான அனுமதி பெறுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.விசா விண்ணப்பங்கள் தொடர்ந்து குவிந்து வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 2.7 மில்லியன் விசா விண்ணப்பங்கள் வரலாம் என கனடா எதிரபார்க்கிறது. 2019 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில், விசா விண்ணப்பங்கள் 55% அதிகரித்துள்ளதால், விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் செப்டம்பர் தொடக்கத்தில் தொடங்கும் வளாக வகுப்புகளில் சேர இன்னும் பலருக்கு விசா கிடைக்கவில்லை. ஒரு சில கல்வி நிறுவனங்கள் வகுப்பில் சேரும் தேதியை 10 நாட்களுக்கு நீட்டித்துள்ளன. கனடா மாணவர் விசா மற்ற நாடுகள் வழங்கும் மாணவர் விசாவிலிருந்து வேறுபட்டது. அது உங்களை நாட்டிற்குள் நுழைய மட்டுமே அனுமதிக்கிறது. இந்த விசாவை மூலம் ஆனால் தங்குவதற்கோ, உங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளவோ முடியாது. அது உங்களை நாட்டிற்குள் நுழைய மட்டுமே அனுமதிக்கிறது. இந்த விசாவை மூலம் ஆனால் தங்குவதற்கோ, உங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளவோ முடியாது. அதற்கு, உங்கள் விசாவுடன் உங்களுக்கு படிப்பு அனுமதி (Study Permit) தேவைப்படும். எளிமையாகச் சொன்னால், மாணவர் விசா என்பது நாட்டிற்குள் நுழைவதற்கான அங்கீகாரம். படிப்பு அனுமதி நீங்கள் அங்கே தங்கி படிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க | UAE: எண்ட்ரி விசா வழிமுறைகளில் மாற்றங்கள், விவரம் இதோ

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் விரைவில் தொடங்கும் நிலையில், கனடா மாணவர் விசாக்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது, இந்தியாவில் இருந்து 230,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கனடாவில் உள்ள இரண்டாம் நிலை கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.இது வரை இல்லாத அளவிற்கு அதிக அளவில் விசா விண்னப்பங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் , 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அனைத்து விசா விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, இயல்புநிலை செயல்முறைக்கு திரும்பும் என்று கனடா நம்புவதாக, இந்தியாவுக்கான கனடா நாட்டின் தூதர் கேமரூன் மேக்கே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News