வேலையை விடப்போறீங்களா? ‘இந்த’ விஷயங்களில் கவனமா இருங்க!

Job Quitting Tips : தங்களின் தொழில் துறை முன்னேற்றத்திற்காக பலர் அவர்களின் வேலையை விடலாம். அப்படி ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு போவதற்கு முன்னர் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம். 

Job Quitting Tips : ஒரு சிலருக்கு, நல்ல சம்பளத்தை விட்டு விட்டு, தனக்கு பிடித்ததை செய்வது கனவாக இருக்கும். ஒரு சிலருக்கு, நல்ல சம்பளம் கொடுக்கும் ஒரு வேலைக்கு போவதுதான் கனவாக இருக்கும். ஒரே நிறுவனத்தில் நாம் பல ஆண்டுகள் இருந்தால், அங்கு நமக்கு முன்னேற்றம் என்பது குறைவாக இருக்கலாம். இதனால் பலர் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கும் மாறுவர். அப்படி, வேறு ஒரு வேலைக்கு மாறுவதற்கு முன்னர் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கு பார்ப்போம். 

1 /7

ஒவ்வொரு நிறுவனங்களை பொறுத்தும் எத்தனை மாதம் நோட்டீஸ் பீரியட் இருக்க வேண்டும் என்பது அமையும். 

2 /7

நிதி ரீதியாக முன்னேறுவதற்கும், தொழில் ரீதியாக முன்னேறுவதற்கும் பலர் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாறுவர். இப்படி வேலையை விடுவதற்கு முன்னர் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. அவை என்ன தெரியுமா? 

3 /7

நிதி மேலான்மை: வேலையை விடுவதற்கு முன்னர், இன்னொரு வேலை கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் உங்களால் 3 முதல் 6 மாதத்திற்கு செலவுகளை சமாளிக்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும். தினசரி செலவுகள், மாதாந்திர செலவுகள் என அனைத்தையும் கணக்கிட்டு ஒரு தாளில் எழுதி கணக்கு பார்க்கவும். 

4 /7

தொழில் முன்னேற்றம்: நீங்கள் அடுத்து செல்லும் வேலையில் அல்லது அடுத்து தேட இருக்கும் வேலையில், உங்களுக்கு தொழில் ரீதியாக முன்னேற்றம் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். 

5 /7

தனிப்பட்ட வாழ்க்கை: நீங்கள் அடுத்து செல்ல இருக்கும் வேலை, உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காமல் இருக்குமா என்பதை பார்க்க வேண்டும். 

6 /7

அலுவலக சூழல்: நீங்கள், அடுத்த வேலையை தேடி போகும் போது, அந்த வேலை செய்யும் இடத்தின் சூழலை எடை போடுங்கள். நீங்கள் ஏற்கனவே டாக்சிக் ஆன இடத்தில் வேலை பார்த்தீர்கள் என்றால், அதே போன்ற இடத்தில் வேலைக்கு சேராமல் இருங்கள். 

7 /7

வேறு வேலைகள்: கையில் ஒரே ஒரு வேலையை வைத்துக்கொண்டு இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விடுவதை விட, கையில் நிறைய ஆஃபர்களை வைத்துக்கொண்டு வேலையை விடலாம் என்பது, அனுபவசாலிகளின் கருத்தாக இருக்கிறது.