ஜாக்கிரதை! குருவால் வரும் 31 நாட்கள் இந்த ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும்

Guru Asta In Meen: இந்து பஞ்சங்கத்தின் படி, அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியின் அதிபதியான குரு நேற்று மீன ராசியில் அஸ்தமித்தார். இதனால் சில ராசிகளுக்கு அசுப விளைவுகள் ஏற்படும். மேலும் சுப காரியங்களில் பல தடைகள் ஏற்படும். அந்த ராசிகளின் விவரத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

இதனிடையே குரு ஏப்ரல் 1, அஸ்தமித்து மீண்டும் 2023 மே 2, உதயமாகுவார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, குரு அஸ்தத்தின் பலன் அனைத்து ராசிகளுக்கும் சாதகமாகவும் எதிர்மறையாகவும் இருக்கும். ஆனால் 5 ராசிகள் உள்ளன, அவை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

1 /5

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். புதிய வேலையைத் தொடங்குவதில் தடங்கள் ஏற்படும், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தையும் முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள்.

2 /5

சிம்ம ராசி: இந்த காலகட்டத்தில், வீட்டில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை ஏற்படலாம், அதே போல் குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும். சோம்பேறித்தனத்தால் பல முக்கியப் பணிகளும் கைகூடாமல் போகலாம்.  

3 /5

விருச்சிக ராசி- ​​மாணவர்கள் திருப்தியற்ற தேர்வு முடிவுகளைப் பெறலாம். உடலில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.  

4 /5

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நெருக்கடி அதிகரிக்கும். உங்களின் கசப்பான பேச்சால் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். முதலீடு செய்வதை முற்றிலும் தவிர்க்கவும்.  

5 /5

மீன ராசி: உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது மட்டுமின்றி பணியிடத்திலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொருளாதார நிலை மோசமடையும். மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.