Astro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!

Lord Shani: சனி பகவான் தனக்கு மிகவும் பிடித்த ராசிகளுக்கு துண்பத்தை கொடுப்பதில்லை. அவர்களுக்கு மிகுந்த செல்வத்தையும் வளமான வாழ்க்கையையும் வழங்குகிறார். 

சனி தேவன் செயலுக்கு ஏற்ற பலனைக் கொடுப்பவர். எனவே அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவானின் வக்ர பார்வை வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்கும் எனக் கூறுவதுண்டு அதே நேரத்தில் சனியின் கருணை மிகவும் வறுமையில் இருப்பவரையும் அரசனாக்குகிறது. 

1 /7

Lord Shani: ஏழரை நாட்டு சனி மற்றும் சனி மகாதசையின் போது கூட சனி பகவான் தனக்கு பிரியமான ராசிகள் மீது கருணை மழை பொழிகிறார்.  இந்த ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியிலும் கூட பாதிப்பு அதிகம் இருக்காது. இந்த ராசிகளிடம் சனிபகவான் எப்பொழுதும் கருணையுடன் இருப்பதோடு,  சுப பலன்களை அள்ளி வழங்குகிறார். 

2 /7

துலாம்: துலாம் ராசியில் சனி பகவான் எப்போதும் உச்சமாக இருப்பதால் சனிபகவான் சுப பலன்களை அள்ளித் தருகிறார். இது தவிர, துலாம் ராசிக்காரர்கள் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள். கடின உழைப்பாளிகள், உணர்ச்சிக்கு மதிப்பு கொடுப்பவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள்.  நேர்மையானவர்கள். இந்த குணங்கள் காரணமாக சனி பகவான் கருணையாக இருப்பார். 

3 /7

மகரம்: மகர ராசியின் அதிபதி சனி தேவன். சனிபகவானின் செல்வாக்கால், எப்போதும் நிம்மத்தியான வாழ்க்கையை வாழுகிறார்கள். மகர ராசிகள் மிகவும் கடின உழைப்பாளிகள், மற்றவர்களுக்கு உதவுவார்கள், தைரியத்தை இழக்க மாட்டார்கள். எப்போதும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். இந்த குணங்கள் காரணமாக, ஏழரை நாட்டு சனியின் போது கூட, இவர்கள் பெரிய அளவில் கஷ்டப்பட மாட்டார்கள்.

4 /7

கும்பம்: மகர ராசியைப் போலவே சனி தேவர் கும்ப ராசிக்கும் அதிபதி ஆவார். இவர்களுக்கு சனியின் தோஷம் இருந்தாலும், மிகக் குறுகிய காலமே அவர்களை இந்து பாதிக்கும். சனி தேவரின் அருளால், இந்த ராசிகள் மிகவும் நேர்மையானவர்கள்,உன்னதமானவர்கள் மற்றும் பொறுமையானவர்கள். சமூகத்தில் மிகுந்த மரியாதையையும் பெறுகிறார்கள்.அவர்கள் வாழ்வில் பணத்துக்குப் பஞ்சம் இருக்காது. வியாபாரம் செய்தால் நிறைய பணம் கிடைக்கும்.

5 /7

சனிபகவானின் அருளைப் பெறவும், ஏழரை நாட்டு சனி மற்றும் சனி மகாதசையின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும் சனிக்கிழமை அனுமன் சாலிசா பாராயணம் செய்யவும். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது.

6 /7

சனி பரிகாரங்கள்: ஏழை, எளியோருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். நாய்க்கு உணவு கொடுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது. 

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.