சுக்கிரன் பெயர்ச்சி.... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்கள் நெருக்கடிகள் காத்திருக்கு..!!

Venus Transit in Taurus: சுக்கிரன் பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பெயர்ச்சி. சுக்கிரன் ஜாதகத்தில் அமைந்திருக்கும் இடம், நிலை முக்கியத்துவம் பெறுகிறது. சில கிரகங்களின் தாக்கம், ஜாதகருக்கு வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் சந்திக்க நேரிடும். அதில் ஒன்று சுக்கிரன்.

சுக்கிரன் நிலை மோசமானதாக அமைந்தால் அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், ஜோதிடத்தில் சுக்கிரன் வலுவாக இல்லை என்றால் அந்த ஜாதகர் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். 

1 /7

ஆடம்பர வாழ்க்கையையும் அழகிய தோற்றத்தையும் கொடுக்கும் சுக்கிரன் கிரகம், இன்று மே 19 ஆம் தேதி காலை 08:42 மணிக்கு மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசியில் நிழைந்துள்ளது. சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து மக்களிடமும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஜோதிட ரீதியாக அனைத்து ராசிகளுக்குமான சுக்கிரன் பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்ளலாம்.

2 /7

ரிஷப ராசியில் சூரியன், குருபகவானுடன் சுக்கிரன் இணைவதால் இந்த சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும், சுக்கிரனும் சூரியனும் சேர்ந்து சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது. எனவே, சுக்கிரன் சஞ்சாரம் சில ராசிகளுக்கு அசுபமாகவும், சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும். இவர்கள் சில இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.

3 /7

சுக்கிரன் பெயர்ச்சி சில ராசிகளுக்கு அசுபமாகவும், சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும்.எனினும்  3 ராசிகளுக்கு சுக்கிரன் சஞ்சாரம் பாதகமான பலன்களை கொடுக்கும். இவர்கள் சில இழப்புகளை சந்திக்க நேரிடலாம். சுக்கிரனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

4 /7

மேஷம்: சுக்கிரன் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களைத் தரும். வாழ்க்கை சிறிது போராட்டமாக இருக்கும். மன உளைச்சல் ஏற்படலாம். இவை அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வாழ்க்கை துணையுடன் சண்டை அல்லது கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உங்களின் முக்கிய முடிவுகள் தவறாக போகலாம். வேலை, தொழில், வியாபாரத்திலும் பிரச்சனைகள் ஏற்படும். நிதி இழப்பு ஏற்படலாம்.

5 /7

கன்னி: சுக்கிரன் பெயர்ச்சி கன்னி ராசிகளுக்கு பல சிரமங்களைத் தரும். சில வேலைகளில் தோல்வி ஏற்படலாம். வீட்டில் சச்சரவுகள் ஏற்படுவதால் சூழ்நிலை மோசமடையும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனமாக வேலை செய்ய வேண்டும். சுற்றுலா செல்ல நேரிடலாம். பயணத்தின் போதும் கவனமாக இருங்கள். இந்த நேரத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம்.

6 /7

தனுசு: சுக்கிரனின் ராசி மாற்றம் முன்னேற்றத்தில் தடைகளை உருவாக்கும். உங்கள் வழியில் வரும் வாய்ப்புகள் நழுவக்கூடும் அல்லது செய்து கொண்டிருக்கும் வேலைக்கு நல்ல பலன் கிடைக்காது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் நீங்கள் பெற முடியாது. போட்டி அதிகரிக்கும். எதிரிகள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். செலவுகள் அதிகரிக்கும். வருமானம் குறையலாம். வீட்டில் சிறுசிறு விஷயங்களும் சச்சரவுகளாக உருவாகும் என்பதால் கவனமாக இருக்கவும். 

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.