Brain Foods: மூளையை ஜெட் வேகத்தில் இயங்க செய்யும் சில உணவுகள்!

மூளைக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க நல்ல உணவை உட்கொள்வது அவசியம். 

 

1 /4

வாதுமை கொட்டை: பார்ப்பதற்கு மூளை போலவே தோற்றமளிக்கும் வாதுமை கொட்டை, உண்மையிலேயே மூளைக்கு சூப்பர்ஃபுட் ஆகும். இது மூளைக்கு பல வழிகளில் பயனளிக்கும். வாதுமை கொட்டையில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (தாவர அடிப்படையிலான ஒமேகா -3 கொழுப்பு அமிலம்), பாலிபினோலிக் கலவைகள் நிறைந்துள்ளது. 

2 /4

பாதாம்: மூளையில் அசிடைல்கொலின் (acetylcholine) அளவை அதிகரிக்க பாதாம் உதவுகிறது. வைட்டமின் பி 6, ஈ, துத்தநாகம் மற்றும் அதில் காணப்படும் புரதங்கள் நரம்பியக்கடத்தி இரசாயனத்தை உருவாக்குகின்றன. இது மூளை சுறுப்பாக இயங்கவும், நினைவாற்றலை பெருக்கவும் உதவுகிறது. 

3 /4

பூசணி மற்றும் ஆளிவிதை: மூளை ஆரோக்கியத்திற்கு பூசணி மற்றும் ஆளிவிதை சிறந்தவை. இந்த விதைகளில் உள்ள துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை சிந்திக்கும் திறனை வளர்க்கின்றன, இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

4 /4

பழங்கள், கீரைகள்: உணவில் ஏராளமான பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பதோடு, சால்மன் போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக அடர் பச்சை இலை காய்கறிகள் மூளைக்கு அதிக ஆற்றலை வழங்குகின்றன.