தோனி முதல் கோலி வரை! ஐபிஎல்லில் இவர்கள் அடிக்கும் ஒரு ரன்னின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2024 இந்தியன் பிரீமியர் லீக் தற்போது இறுதி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப்க்கு தகுதி பெற சென்னை மற்றும் பெங்களூரு இன்று விளையாடுகிறது.  இந்நிலையில், நட்சத்திர வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்னின் மதிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

 

1 /5

ரோஹித் சர்மா - மும்பை இந்தியன்ஸ் ரூ.16 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட ரோஹித் சர்மா இந்த ஆண்டு 13 போட்டிகளில் விளையாடி இதுவரை 349 ரன்கள் அடித்துள்ளார். ஒரு ரன்னிற்கு தோராயமாக ரூ 4.58 லட்சம் பெற்றுள்ளார்.  

2 /5

மிட்செல் ஸ்டார்க் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போனவர் மிட்செல் ஸ்டார்க். கொல்கத்தா அணியால் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் இந்த ஆண்டு 12 விக்கெட் எடுத்துள்ளார். ஒரு விக்கெட்டின் விலை 2.06 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

3 /5

எம்எஸ் தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை அநியாய ரூ.12 கோடி தக்கவைக்கப்பட்ட தோனி இந்த ஆண்டு இதுவரை 136 ரன்கள் அடித்துள்ளார்.  ஒரு ரன்னின் தோராய மதிப்பு ரூ. 8.8 லட்சம் ஆகும்.  

4 /5

கேஎல் ராகுல் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் லக்னோ அணியால் ரூ. 17 கோடிக்கு வாங்கப்பட்ட கேஎல் ராகுல் இந்த ஆண்டு 465 ரன்கள் இதுவரை அடித்துள்ளார். ஒரு ரன்னிற்கான தோராய மதிப்பு ரூ. 8.8 லட்சம் ஆகும்.  

5 /5

ஹர்திக் பாண்டியா - மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 15 கோடி எடுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா இதுவரை 200 ரன்கள் அடித்துள்ளார். ஒரு ரன்னிற்கான தோராய மதிப்பு ரூ. 7.50 லட்சம் ஆகும்.