இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டி

Guru Asta 2024: வேத ஜோதிடத்தில், கடவுள்களின் குருவான வியாழனுக்கு மிகவும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதன்படி மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையும் குரு மே 3 ஆம் தேதி இதே ராசியில் அஸ்தமிக்க உள்ளது.

திருமணம், குழந்தைகள், அதிர்ஷ்டம், மதப் பணி, செல்வம் ஆகியவற்றின் காரணியான குரு, தனுசு ராசியின் அதிபதி ஆகும். குரு அஸ்தமனத்தால் அனைத்து 12 ராசிகளும் பாதிக்கப்படும், ஆனால் மூன்று ராசிக்காரர்களுக்கு இதன் மூலம் அதிக பலன் கிடைக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

1 /7

குரு அஸ்தமனம் 2024: மே 1 ஆம் தேதி குரு பகவான் தனது ராசியை மாற்றி பெயர்ச்சி ஆகவுள்ளார். இதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, மே 3 ஆம் தேதி இரவு 10:08 மணிக்கு ரிஷப ராசியில் குரு பகவான் அஸ்தமிக்க உள்ளார். ஜோதிடத்தில் இது ஒரு இது மிகப்பெரிய  நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

2 /7

அனைத்து கிரகங்களையும் போலவே குரு அஸ்தமனம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /7

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு அஸ்தமனம் சாதகமான பலனைத் தரும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுப்படுவீர்கள். ஆரோக்கியமும் சிறப்பாக தரும்.

4 /7

கடகம்: கடக ராசிக்காரர்களும் குருவின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இரண்டும் மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்புடன் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

5 /7

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குரு அஸ்தமனம் வரப்பிரசாதமாக அமையும். வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் பெருகும். வேலையையும் தொடங்க உகந்த நேரம். ஆன்மீக செல்வம் பெறலாம். குடும்பத்தில் சுபிட்சமும், நிதி ஆதாயமும் உண்டாகும்.

6 /7

குரு பகவானை மகிழ்வித்து அவரது அருள் பெற, ‘குரு பிரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ’ என்ற ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யலாம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.