ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும்... காரணம் என்ன!

Women Needed More Sleep Than Men: உலக தூக்க தினம் (World Sleep Day 2024) இன்று கொண்டாடப்பட்ட நிலையில், பெண்களுக்கு தூக்கம் எவ்வளவு அவசியமானது என்பதையும், அவர்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதையும் இதில் காணலாம். 

  • Mar 15, 2024, 22:04 PM IST

Women Needed More Sleep Than Men: உலக தூக்க தினம்  (World Sleep Day) வருடாவருடம் மார்ச் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தூக்கம் என்பது ஆண், பெண் உள்ளிட்ட அனைத்து பாலினத்தவர்களுக்கும் அத்தியாவசியமான நிலையில், பெண்களுக்கு 7-8 மணிநேரங்களை விட கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

 

 

 

1 /7

தூக்கம் என்பது மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், உடல் புத்துணர்ச்சியாக இருப்பதற்கும் மிகவும் அவசியமானது. மூளை தன்னை தானே சரியாக்கிக்கொள்ள தூக்கம்தான் ஒரே வழி.   

2 /7

ஆண், பெண் மட்டுமின்றி ஒவ்வொரு வயதினருக்கும் தூக்கத்திற்கான கால அளவு என்பது மாறுபடும். 7-9 மணிநேரம் குழந்தைகளுக்கும், 7-8 மணிநேரம் வயது வந்தோருக்கும் தூக்கம் தேவை என கூறப்படுகிறது.   

3 /7

வயது வந்தோரில் ஆண்களை விட பெண்கள் இன்னும் சற்று நேரம் கூடுதலாக தூங்க வேண்டும் என்று ஓர் ஆய்வின் முடிவில் வெளியாகி உள்ளது. அதனால், பெண்கள் 7-8 மணிநேரத்தை விட சற்று கூடுதலாக தூங்க வேண்டும்.   

4 /7

அதாவது, பெண்களின் மூளை சற்று வித்தியாசமானது, ஆண்களுடையதை விட சற்று சிக்கலானதும் கூட. பெண்கள் ஆண்களை விட ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்யக்கூடியவர்கள். எனவே, அவர்களின் மூளை விரைவாக செயல்படும், அதிகம் செயல்படும். 

5 /7

இந்த காரணத்தினால்தான் பெண்களுக்கு ஆண்களை விட சற்று அதிக தூக்கம் தேவைப்படுகிறது என கூறப்படுகிறது. அதில் சராசரியாக 7 மணிநேரம் வயது வந்தோர் தூங்குகிறார்கள் என்றால் பெண்களுக்கு இதில் 11-20 நிமிடங்கள் கூடுதல் தூக்கம் வேண்டும் என்றும் Sleep Foundation ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

6 /7

தூக்கமின்மை பிரச்னையில் ஆண்களை விட பெண்களே 40% அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   

7 /7

தூக்கமின்மையால் பெண்களுக்கு கவலை மற்றும் மன அழுத்தம் ஏற்படும். எனவே, பெண்கள் தவறாமல் நீண்ட தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.