ஒரே மாசத்தில் அழகாக இந்த ஒரு பழக்கம் மட்டும் போதும்! ஆரோக்கியமும் கூடுதல் போனஸ்

No Sugar Diet: சர்க்கரை சாப்பிடுவது உணவின் சுவையை அதிகரிக்கும் அதே வேளையில், சர்க்கரை உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆனால் ஒரு மாதம் சர்க்கரையை சாப்பிடாமல் இருந்தால், உங்கள் உடல் நிலை எப்படி மாறும் என்பதைத் தெரிந்துக் கொண்டால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்....  
 

சர்க்கரை என்பது நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஒரு நாளைக்கு பல முறை ஏதாவது ஒரு வழியில் சர்க்கரையை உட்கொள்ளும் பழக்கம் சில ஆண்டுகளாக நம்மிடையே பரவிவிட்டது. இதன் விளைவு உடன் பருமன் உட்பட பல நோய்களாக வெளிப்படுகிறது

1 /8

சர்க்கரை சாப்பிடுவது உணவின் சுவையை அதிகரித்தாலும், ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். சர்க்கரையின் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், சில நாட்களுக்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திப் பாருங்கள், நீங்களே வித்தியாசத்தை உணரலாம்.

2 /8

நீரிழிவு நோயாளிகள் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இனிப்புகளை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். சில வாரங்களுக்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது இன்சுலின் உற்பத்தியை சீராக்குகிறது 

3 /8

பற்களில் குழி மற்றும் சிதைவுக்கு ஒரு காரணம் சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு. நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால், அது பல பல் பிரச்சனைகளையும் குறைக்கிறது

4 /8

பருக்கள், தோல் அழற்சி மற்றும் வறண்ட சருமம் போன்ற பல பிரச்சனைகள் சர்க்கரையை உட்கொள்வதால் தூண்டப்படலாம். அதேபோல, சருமமும் விரைவில் வயதாகிவிடும். நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய பிறகு, இந்த பக்கவிளைவுகள் அனைத்தையும் தவிர்க்கலாம் மற்றும் உங்கள் தோல் நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  

5 /8

சர்க்கரையில் நிறைய கலோரிகள் உள்ளன, ஆனால் இந்த கலோரிகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. வெற்று கலோரிகள் உங்கள் உடல் பருமனை அதிகரிக்கும். எனவே, சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால், எடை கட்டுக்குள் இருக்கும் மற்றும் பல நோய்களின் ஆபத்து குறையும்

6 /8

வெள்ளை சர்க்கரை சுத்திகரிக்கப்பட்டதால் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு மிக வேகமாக அதிகரிக்கும். அதிக சர்க்கரை அளவு காரணமாக, ஒருவர் உடல் வலி, சோம்பல் மற்றும் சோர்வு போன்றவற்றை உணரலாம். ஆனால் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துபவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருக்காது மேலும் இதன் காரணமாக அவர்களின் எனர்ஜி லெவலும் கூடுகிறது.

7 /8

நோ சுகர் டயட்டில் அதிகப்படியான சர்க்கரை தவிர்த்தாலும், பழங்களில் காணப்படும் இயற்கை சர்க்கரையை உட்கொள்ளலாம். பெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் பேரிக்காய் போன்ற பழங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் அவை அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகளை வழங்குகின்றன.

8 /8

நோ சுகர் உணவுமுறையை பின்பற்றினால், கூடுதல் சர்க்கரையைக் கொண்ட உணவுகள் மற்றும் பானங்களை நீக்குவது அல்லது குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் சோடா, பழச்சாறுகள், எனர்ஜி ட்ரிங்குகள் மற்றும் சர்க்கரை போட்ட காபி அல்லது தேநீர் போன்ற பானங்கள் அடங்கும்.