குண்டு குண்டா இருக்குற தொப்பையை 15 நாட்களில் குறைக்க இந்த விதைகளை சாப்பிடுங்கள்

Seeds For Health: உடல் எடையை குறைக்க உணவில் நாம் சில விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அவை என்னென்ன விதைகள் மற்றும் எப்படி இவை உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பதை பார்ப்போம்.

Seeds For Weight Loss: சில விதைகளை நாம் தினமும் உணவில் ஒரு அங்கமாக்க சேர்த்துக்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும். இந்த விதைகள் உடல் எடையைத் தவிர மன அழுத்தம் போக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

1 /6

சியா விதைகள்- சியா விதைகளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஏனெனில் இதில் இரும்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களுடன் ஒமேகா -3 கொழுப்புகளின் நல்ல மூலமாகும். அதேபோல் சியா விதைகள் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

2 /6

ஆளி விதைகள்- ஆளிவிதையில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்புகள் உள்ளது. மேலும் நார்ச்சத்து, வைட்டமின் பி1 மற்றும் தாமிரம், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை உடல் எடையைக் குறைக்க உதவும்.

3 /6

பூசணி விதைகள்- பூசணி விதைகளில்ஒமேகா-6 கொழுப்புகள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்க உதவுவவுடன், உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது.

4 /6

தர்பூசணி விதைகள்- தர்பூசணி விதைகளில் ஒமேகா6 கொழுப்பு, வைட்டமின்கள் பி, மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்ற தாதுக்கள் உள்ளதால் இவை உடல் எடை குறைக்கவும், சருமத்தை பொலிவாக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.  

5 /6

முலாம்பழ விதைகள்- முலாம்பழம் விதைகள் புரதங்களின் ஆதாரமாகும். இவை மனநிறைவை உணர்வும் தசைகளை உருவாக்கவும் உதவியாக இருக்கும். மேலும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனால் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது.

6 /6

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.