உடற்பயிற்சி இல்லாமலேயே இந்த வழிகள் மூலம் உடல் எடையை குறைக்கலாம்!

பலரும் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலைலையில் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

1 /5

மென்று சாப்பிடுங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள். உணவை ஜீரணிக்க நம் மூளைக்கு நேரம் தேவை. எனவே, மெதுவாக சாப்பிடுவது உடலுக்கு நன்மை தருகிறது.

2 /5

வீட்டு உணவு அதிகம் வெளியில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட தொடங்குங்கள். இது உங்கள் முழு உடலுக்கும் நன்மை பயக்கும். 

3 /5

தண்ணீர்  தினசரி அதிகம் தண்ணீர் குடிப்பதன் மூலம் உணவின் அளவை குறைக்கலாம். இதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பு நன்கு தண்ணீர் குடித்தால் நல்லது. 

4 /5

நார்ச்சத்து உணவுகள் குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை விட அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் உடலுக்கு திருப்திகரமாக இருக்கும். எனவே, தேவையில்லாத நேரத்தில் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது.

5 /5

புரத உணவுகள் புரதச்சத்து அதிகம் உள்ள உணவு உங்களின் கலோரி அளவைக் குறைப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும், உணவில் உள்ள புரதம் பசி ஹார்மோன்களைக் குறைக்கிறது. இதனால் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.