‘கொடி பறக்குதா..’ ஹைதராபாத்தை சைலன்ஸ் செய்த சென்னை அணி! இணையத்தில் பரவும் செம மீம்ஸ்..

CSK vs SRH Match Viral Tamil Memes : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், சென்னை அணி ஹைதராபாத் அணியை 74 ரன்களில் வீழ்த்தியது. இதையடுத்து, ரசிகர்கள் பலர் இந்த போட்டி குறித்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

CSK vs SRH Match Viral Tamil Memes : ஐபிஎல் போட்டி நடைப்பெற்று வருவதை அடுத்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டி சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில போட்டிகளாக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அடிப்பட்ட போதிலும் 98 ரன்களை எடுத்திருந்தார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸில் களமிறங்கிய ஹைதராபாத் அணி, ஆரம்பத்தில் சரமாரியாக ஆடுவது போல இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், 18.5 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே ஹைதராபாத் அணி குவித்தது. இதையடுத்து சென்னை அணியின் ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர். 

1 /7

அண்ணா..ஏண்ணா இவ்ளோ பந்துகள வேஸ்ட் பண்றீங்க!

2 /7

சைலன்ஸ் சிம்பிள் காண்பித்த ஹைதராபாத் அணியை மொத்தமாக முடித்த சி.எஸ்.கே

3 /7

பவர் ப்ளேயில் போய் மத்த டீம்க்கு இவ்ளோ ரன் கொடுக்கலாமா?

4 /7

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸின் செல்லக்குட்டி-வெல்லக்கட்டி துஷார் தேஷ்பாண்டேதான்! 

5 /7

சென்னை ரசிகர்கள் பி லைக் : இவன் உண்மையாவே டம்மிதான் போல...

6 /7

ஆமா..அப்போதான வைரல் ஆக முடியும்!

7 /7

இதை பார்க்கும் போது மனதில் அப்படியொரு நிம்மதி! எங்க வந்து யார சைலன்ஸ் பண்றீங்க..?