எலும்பு மெலிதல் நோயை தடுக்கும் ‘சூப்பர்’ ஜூஸ்கள்!

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கத்தால்,  முதியவர்கள் மட்டுமல்ல இளைஞர்களுக்கு கூட எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உணவில் கால்சியம் வைட்டமின் டி குறைபாட்டினால் எலும்புகள் பலவீனமடைகின்றன. எலும்புகள் பலவீனமடைவதால் ஆஸ்டியோபோரோசிஸ்  அபாயம் ஏற்படுகிறது. அதனால் லேசாக அடிப்பட்டால் கூட எலும்பு முறியும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் ஏற்பட்டால், லேசாக அடிப்பட்டால் கூட எலும்பு முறியும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. எலும்புகளின் வலிமைக்கும்எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும், கால்சியம் நிறைந்த உணவுகள் மிக அவசியம். 

 

1 /6

ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் ஏற்பட்டால், லேசாக அடிப்பட்டால் கூட எலும்பு முறியும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. எலும்புகளின் வலிமைக்கும்எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும், கால்சியம் நிறைந்த உணவுகள் மிக அவசியம்.  

2 /6

பொதுவாக பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களில் போதுமான அளவு கால்சியம் உள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரியும். இவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வது எலும்புகளை வலுப்படுத்தும். அதே போன்று, எலும்பை வலுவாக்க சில ஜூஸ்கள் அருந்துவதும் நல்ல பலனைத் தரும்.  

3 /6

ஆரஞ்சு பழத்தில் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் டி போதுமான அளவில் காணப்படுகிறது. இது தவிர வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் போதுமான அளவு காணப்படுகின்றன. இவை அனைத்தும் எலும்புகளை வலுவாக்கும்.  

4 /6

திராட்சையில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் போதுமான அளவு காணப்படுகின்றன. வைட்டமின் சி, எலும்புகளின் கொலாஜன் உருவாவதற்கு மிகவும் முக்கியமானது. எனவே, திராட்சை ஜூஸ் குடிப்பதால் எலும்புகள் வலுவடையும்.  

5 /6

பச்சை இலை காய்கறிகளின் ஸ்மூத்தி குடிப்பதன் மூலம், எலும்புகள் வலுவடைவதோடு, எலும்பு அடர்த்தியும் அதிகரிக்கிறது. இவற்றில், எலும்புகளின் வலைமைக்கு தேவையான போதுமான அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. 

6 /6

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)