Astro: ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளும்... அதிர்ஷ்ட ராசிகளும்..!

ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளும் பலன்களும்: ஏப்ரல் மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த மாதத்தில் கிரக நிலைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஏப்ரல் மாதத்தில் சூரியன் சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்கள் பெயர்ச்சியாகும்.

ஏப்ரல் மாத கிரகநிலை மாற்றங்களாலும் பெயர்ச்சிகளாலும், எந்தெந்த ராசிகள் பலனடைய போகிறார்கள் எந்த வகையில் பாதிப்பு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1 /8

2024 ஏப்ரல் மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில், சூரியன், சுக்கிரன்,, செவ்வாய் ஆகிய கிரகங்கள் தனது ராசிகளை மாற்றிக் கொள்ள உள்ளன. மாற்றத்தால் ஏற்படும் கிரக சேர்க்கைகள் மற்றும் கிரகநிலை மாற்றங்கள் காரணமாக பலனை அனுபவிக்க போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.  

2 /8

புதன் வக்ர பெயர்ச்சி: ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி மேஷ ராசியில் புதன் வக்ரம் அடைய உள்ள நிலையில், ஞானத்தை அள்ளிக் கொடுக்கும் கிரகமான புதன், சில ராசிகளுக்கு சுப பலன்களை கொடுக்கும். மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.

3 /8

புதன் பெயர்ச்சி: ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி, புதன் மீன ராசியில் சஞ்சரிப்பார். இவர் மே மாதம் பத்தாம் தேதி வரை மீன ராசியில் இருப்பார். இதனால் மிதுனம், சிம்மம், கும்பம் ஆகிய ராசிகள் பலனடைவார்கள்.

4 /8

சூரிய பெயர்ச்சி: கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி மேஷ ராசியில் பிரவேசிப்பார். இதனால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும் குரு பகவானும் இணைவார்கள். இதனால் மேஷம் மிதுனம் ஆகிய ராசிகள் அதிகமான சுப பலன்களை பெறுவார்கள்.

5 /8

செவ்வாய் பெயர்ச்சி: ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அன்று கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் மீனத்தில் பிரவேசிப்பார். இதனால் புதன் ராகு சேர்க்கை ஏற்படும். இதனால் மிதுனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிகள் பலநடைவார்கள்.

6 /8

சுக்கிரன் பெயர்ச்சி: செல்வ வளங்களை அள்ளி கொடுக்கும் சுக்கிரன், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மேஷ ராசியில் சஞ்சரிப்பார். இதனால் ஏற்படும் சுக்கிரன் குரு பகவான் இணைவு, மேஷம், ரிஷபம், சிம்மம் ஆக்கிய ராசிகளுக்கு மகிழ்ச்சி கொண்டு வந்து சேர்க்கும்.

7 /8

ஏப்ரல் மாதத்தில், மேஷம் ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆக்கிய ராசிகள் அதிகபட்ச பலனை பெறுவார்கள். இந்த ராசிகளுக்கு ஏப்ரல் மிகவும் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவேறும். பண வரவு சிறப்பாக இருக்கும்.

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.