தினமும் காலை 1 கிளாஸ் வெந்நீருடன் 6 மிளகு... உடலில் நடக்கும் அதிசய மாற்றங்கள்!

கருமிளகின் பலன்கள்: எந்த உணவிலும் சிறிது கருமிளகை சேர்த்தால், அதன் சுவை இரட்டிப்பாகும். கருப்பு மிளகு அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், பலர் சாப்பிடும் போது அதை தூக்கி எறிந்து விடுகிறார்கள். 

கருமிளகு  உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் ஆச்சரியமாக  பலன்களை கொடுக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 6 கருமிளகுடன் ஒரு கிளாஸ் வெந்நீர் அருந்தி வர வியக்கத்தக்க பலன்களை பெறலாம். 

1 /9

தினமும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மசாலா பொருளான கருமிளகை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மூளை அரோக்கியம் முதல் உடல் பருமனை குறைப்பது வரை எண்ணற்ற பலன்களை பெறலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 6 கருமிளகுடன் ஒரு கிளாஸ் வெந்நீர் அருந்தி வர வியக்கத்தக்க பலன்களை பெறலாம். 

2 /9

மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள், வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும். மேலும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றையும் போக்கும். 

3 /9

உடல் எடையைக் குறைக்க நினைத்தால், மிளகை தினமும் சாப்பிட்டு வாருங்கள். ஏனெனில் மிளகு உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டது. 

4 /9

கருமிளகு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவதோடு, அழற்சி மற்றும் கீல்வாதத்திற்கு எதிர் பொருளாக  செயல்படுகிறது.

5 /9

கருப்பு மிளகை உணவில் சேர்த்துக் கொண்டால், மூளை சுறுசுறுப்பாக இருப்பதோடு, மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

6 /9

 கருமிளகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் அற்புத மசாலா.

7 /9

கருமிளகு உமிழ்நீரை சுரக்கச் செய்வதால் ஜீரணக் கோளாறுகளுக்கும், வயிற்றில் ஏற்படும் தொற்றுகளுக்கும் நல்ல மருந்தாக உள்ளது.  ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

8 /9

நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை இருந்தால், கருமிளகை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தண்ணீர் சத்துபற்றாக்குறை ஏற்படாது

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.