கர்ப்பிணிகள் கவனத்திற்கு... கருவை பாதிக்கும் ‘இந்த’ உணவுகளுக்கு நோ சொல்லுங்க!

கர்ப்பக்காலம் என்பது மிக  பெண்களுக்கு முக்கியமான காலகட்டம். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். 

பெண்களின் வாழ்க்கை பயணத்தில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும் இந்த காலத்தில் பெண்கள் எதையெல்லாம் சாப்பிடுவதை தவிர்ப்பது, பிறக்கப் போகும் குழந்தைக்கு நல்லது தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டால் உபயோகமாக இருக்கும்.

1 /7

கருத்தரித்த பெண்கள் தங்கள் வயிற்றுக்குள் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்கள் எதையெல்லாம் சாப்பிடுவதை தவிர்ப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதைத் தெரிந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

2 /7

கர்ப்ப காலத்தில் முட்டை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது தான். ஏனெனில் முட்டையில் நிறைய அளவு புரோட்டீன் காணப்படுகிறது. ஆனால் வேக வைக்காத அல்லது பாதி மட்டுமே வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவது, பாக்டீரியா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி, வயிற்றில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். 

3 /7

கர்ப்ப காலத்தில் பதப்படுத்தப்பட்ட பால் மட்டுமே சிறந்தது.  பதப்படுத்தப்படாத பாலை குடிக்கும் போது அதில் உள்ள பாக்டீரியா தொற்று நஞ்சுக் கொடியை கடந்து கருவை அடைந்தால் கருக்கலைப்பு,  குறை பிரசவம் மற்றும் குழந்தை பிறந்த பிறகு ஆரம்ப கால நோய்த்தொற்றுக்கு வழி வகுக்கும்.

4 /7

கெமோமில், கிரீன் டீ போன்ற மூலிகை தயாரிப்புகள் கொண்ட தேநீர்கள் நிறைய நன்மைகளைக் கொடுத்தாலும் கர்ப்ப காலத்தில் கருவில் உள்ள சிசுவின் எடை குறைவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

5 /7

ஐஸ்கிரீம், கேக், சாக்லெட், ஸ்வீட்டான டிரிங்க்ஸ் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதால் கர்ப்பக்கால சர்க்கரை நோய் வருவது,  நெஞ்செரிச்சல், வாந்தி, மலச்சிக்கல், குமட்டல், எடை அதிகரிப்பது, கருவின் வளர்ச்சியை பாதிப்பது, குறை பிரசவம் போன்ற பிரச்சனைகள் வரலாம். 

6 /7

சுறா, ட்யூனா மீன்கள் அதிக மெர்குரி உள்ள மீன்கள் அதிக அளவில் உட்கொண்டால் நரம்பு மண்டலம், வயிற்றில் உள்ள கரு, சிறுநீரகங்கள், நோய் எதிர்ப்பு திறன் ஆகியவைப் பாதிக்கலாம். அரைவேக்காடு மீன்களை உண்ண கூடாது. ஓமேகா 3 சத்துகளோடு, குறைந்த மெர்குரி அளவு கொண்ட மத்தி, நெத்திலி, சங்கரா மீன், வஞ்சரம், மீன்களை மத்தி, நெத்திலி, சங்கரா மீன், வஞ்சரம்  ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்

7 /7

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.