நீங்கள் ஆபாச உலகிலேயே இருக்கிறீங்க - ரோஜாவுக்கு சன்னி லியோன் காரசார பதிலடி

பவன் கல்யாணை விமர்சிக்கும்போது சன்னிலியோன் குறித்து பேசிய அமைச்சர் ரோஜாவுக்கு, சன்னிலியோன் காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார்.

1 /5

ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த 2 வாரமாக 'யாத்ரா' என்ற நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நடை பயணத்தின் போது முதல்- மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடும் விமர்சனம் செய்தார்.  

2 /5

இதற்கு ரோஜா பதில் கூறுகையில், "பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால் அவரை பார்க்கத்தான் கூட்டம் வருகிறது. இதெல்லாம் ஓட்டாக மாறாது. பவன் கல்யாண் முதல்- மந்திரிக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் போது சன்னி லியோன் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று பேசினார்.   

3 /5

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையத்திலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது. இந்தநிலையில் சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் ரோஜா பேசிய வீடியோவை வெளியிட்டு நான் ஆபாச நடிகைதான்.   

4 /5

ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை. உங்களை போல் இல்லாமல் நான் என்ன செய்ய விரும்பினாலும் அதை வெளிப்படையாகவே செய்வேன். 

5 /5

ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன். அதை நீங்கள் இன்னும் செய்யவில்லை என பதிலடி கொடுத்துள்ளார்