இந்த செய்தியைப் படித்தால்... ஒட்டகப்பால் எங்கே கிடைக்கும் என தேடிச் செல்வீர்கள்!

நம்மில் பலர், பசும்பால் எருமை பால் ஆகியவற்றை நிச்சயம் அருந்திருப்போம்.. ஆட்டுப்பாலை கூட சிலர் குடித்து இருப்பார்கள். ஆனால் ஒட்டகப் பால் பற்றி அறிந்திருக்கிறீர்களா...!

ஒட்டக பாலில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் முடிவுகள் வந்துள்ளன. பாலியல் பிரச்சனைகள் முதல், உடல் பலவீனத்தை நீக்குவது வரை ஒட்டக பாலில் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

1 /6

ஒட்டகப் பாலில், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வைட்டமின் ஏ பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதைத் தவிர புரதம் கால்சியம் மற்றும் தாதுக்கள் அடங்கிய ஊட்டச்சத்து மிக்க பால் இது.  

2 /6

ஒட்டகப் பாலில் இன்சுலின் போன்ற புரதங்கள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள், இதனை இயற்கை சிகிச்சை உணவாகக் கருதி தாராளமாக அருந்தலாம்.

3 /6

ஒட்டக பாலின் மருத்துவ பலன்களில், பாலியல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் குணமும் அடங்கும். ஆண்மையின்மையை போக்கும் ஆற்றல் ஒட்டக பாலுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

4 /6

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் ஒட்டகப் பாலை அருந்துவதால், நல்ல பலன் கிடைக்கும்.

5 /6

வைட்டமின் ஏ நிறைந்த ஒட்டகப்பால், மாலைக்கண் நோய் வருவதை தடுக்கிறது, மேலும் இதில் உள்ள வைட்டமின் கே கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.