யூரிக் அமிலம் அளவை இயற்கை முறையில் குறைக்கணுமா? இந்த 6 உணவுகள் போதும்

யூரிக் அமிலம் என்பது நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் ஒரு ரசாயனமாகும், இது பியூரின்கள் உடைக்கப்படும் போது உருவாகிறது. குறிப்பாக உங்கள் ரத்தத்தில் அதிகப்படியான யூரிக் அமிலம் இருப்பதால், கீல்வாதம் முதல் சிறுநீரகக் கற்கள் வரை பல சிக்கல்களை ஏற்படுத்தும். 

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் பல உடநலப் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இந்த பதிவில் அதிகளவு யூரிக் அமிலத்தை கட்டுபடுத்த எந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1 /7

பப்பாளி: பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இவை செரிமானத்திற்கு உதவும். எனவே யூரிக் அமில பாதிப்புகளுக்கு சிறந்த தேர்வாக பப்பாளி பழத்தை சாப்பிடலாம்.  

2 /7

கிவி: கிவியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே யூரிக் அமில பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் கிவி பழம் சாப்பிட வேண்டும்.  

3 /7

ப்ரோக்கோலி: ப்ரோக்கோலி வைட்டமின் சி சத்து கிடைப்பது மட்டுமின்றி, பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் இதை தினமும் உட்கொள்ளலாம்.  

4 /7

அன்னாசி: யூரிக் அமில பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு அன்னாசிப்பழம் நல்ல தீர்வைக் கொடுக்கும். இதில் உள்ள நார்ச்சத்து பியூரினை ஜீரணிக்க உதவுவதால், யூரிக் அமிலம் சிறப்பாக கட்டுப்படுத்தப்படும்.  

5 /7

கொத்தமல்லி: கொத்தமல்லி, பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது, எனவே கொத்தமல்லியில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவும்.  

6 /7

இஞ்சி: இஞ்சி வீக்கத்தைக் குறைக்க உதவும். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் யூரிக் அமில அளவைக் குறைக்கவும் வலியைக் குறைக்கவும் 

7 /7

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.