நடக்க பிடிக்குமா? அப்படியென்றால் எடையை குறைப்பது மிக சுலபம்

Weight Loss Tips: உடல் எடையை குறைக்கும் எண்ணம் கொண்டு, ஏதோ ஒரு காரணத்தால் முறையான உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு நடைப்பயிற்சியை விட சிறந்த உடற்பயிற்சி எதுவும் இருக்க முடியாது. 

உடல் எடையைக் குறைக்க, உணவுப் பழக்கத்தைப் போலவே உடல் செயல்பாடும் முக்கியம். நம்மில் பெரும்பாலோர் உடல் எடையை குறைக்க விரும்புகிறோம், ஆனால் உடற்பயிற்சி செய்ய சிலரிடம் நேரம் இருப்பதில்லை, சிலரிடம் விருப்பம் இருப்பதில்லை. இதனால் நாம் விரும்பிய இலக்கை அடைய முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைக்க ஒரு எளிய வழி உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /8

உடல் எடையை குறைக்கும் எண்ணம் கொண்டு, ஏதோ ஒரு காரணத்தால் முறையான உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு நடைப்பயிற்சியை விட சிறந்த உடற்பயிற்சி எதுவும் இருக்க முடியாது. மக்கள் நடைப்பயிற்சி, அதாவது வாக்கிங்கின் பயன்களை குறைத்து மதிப்பிட்டாலும், தினசரி நடைப்பயிற்சி (Walking) பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது என்பதே உண்மையாகும். 

2 /8

தினமும் வாக்கிங்க் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். நடைப்பயிற்சியின் அனைத்து நன்மைகளையும் பயன்படுத்தி உடல் எடையை குறைக்க, நீங்கள் சிறிது வேகமாகவும் ஒருமுகமாகவும் நடக்க பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி கொழுப்பை எரிக்கவும், இடுப்பு சுற்றளவை குறைக்கவும் உதவும். அதுமட்டுமின்றி, சில முறைகள் மற்றும் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், கலோரிகளை திறம்பட எரிப்பதிலும் உதவி கிடைக்கும். 

3 /8

பவர் வாக்கிங் (Power Walking) என்பது ஒரு பிரபலமான நுட்பமாகும். இது குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க முடியும். 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சில நிமிடங்களுக்கு சிலர் வேகமாக நடப்பதை அல்லது ஓடுவதை நீங்கள் பூங்காவில் பார்த்திருப்பீர்கள். பவர் வாக்கிங்கில் சாதாரண வேகத்தில் சுமார் 10 நிமிடங்கள் நடந்துவிட்டு, அதன் பின்னர் 2 நிமிடங்களுக்கு வேகமாக நடக்க வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் வழக்கமான வேகத்திற்கு மீண்டும் திரும்பலாம். பவர் வாக்கிங் நாம் சோர்வடையாமல் கூடுதல் கலோரிகளை எரிக்க நமக்கு உதவ்யுகிறது. 

4 /8

நடைபயிற்சியை அதிக சுவாரஸ்யமாக மாற்ற, உங்கள் நடைப்பயிற்சியில் சில பயிற்சிகளைச் சேர்க்கலாம். 10-15 நிமிடங்கள் நடந்த பிறகு, சிறிது நேரம் ஸ்க்வாட்ஸ், புஷ்அப்கள், கிக்-பேக் மற்றும் ஹை-நீ போன்ற பயிற்சிகளை செய்யலாம். இது உங்கள் இதயத் துடிப்பை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும் மற்றும் நடைபயிற்சியின் போது அதிகம் பயன்படுத்தப்படாத தசைகளில் இவை வேலை செய்யும்.

5 /8

நீங்கள் வாக்கிங்க் செய்யும் இடத்தில் மேடு இருந்தால், அங்கே கண்டிப்பாக ஏற்றத்தில் வாக்கிங் செய்யவும். நீங்கள் ஜிம் செல்லும் நபராக இருந்தால், கண்டிப்பாக சாய்ந்த டிரெட்மில்லில் (Incline Treadmill) நடக்கவும். இது தவிர வீட்டில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம். நடைப்பயிற்சியில் சிறு சிறு சவாலான விஷயங்களையும் சேர்த்துக்கொண்டால் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்பதே இப்படிச் செய்வதற்கு முக்கியக் காரணமாகும். இது உங்கள் க்ளூட் மற்றும் முதுகு தசைகளில் வேலை செய்யும், தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்கவும், உங்கள் கால்களை தொனிக்க உதவும். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை ஏற்றமான இடத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

6 /8

ஆரோக்கியமான இதயம் மற்றும் உடலை பெற, தினமும் 10 ஆயிரம் படிகள் (ஸ்டெப்ஸ்) நடக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் தினசரி ஸ்டெப்சின் எண்ணிக்கையை அதிகரிப்பது உங்கள் ஸ்டாமினாவை மேம்படுத்தவும் உதவும். இதன் மூலம் அதிக ஆற்றலுடன் நடக்கவும், அதிக கலோரிகளை எரிக்கவும் முடியும். தினமும் 10 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் எடையை குறைக்க உதவும். 

7 /8

உங்களின் தினசரி ஸ்டெப்சை கண்காணிக்க ஃபிட்னஸ் பேண்ட் அல்லது ஃபோன் ஆப்ஸ் அல்லது ஸ்மார்ட்வாட்ச் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். வீட்டு வேலைகளில் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதன் மூலமும், உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் என்ற இலக்கை எட்ட முடியும்.

8 /8

அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.