தமிழ்நாட்டில் அனைவருக்கும் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படுமா? AIADMK சொல்வது உண்மையா?

Kalaignar Magalir Urimai Thogai: அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகையாக தமிழ்நாடு அரசு ரூ.1000 வழங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தேர்தல் நேர உத்தியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது

தற்போது கடந்த சில மாதங்களாக தமிழக பெண்களில் சிலருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது

1 /7

தமிழகத்தில் தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல், ரூ.1000 கொடுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, திருமணமான, குழந்தைகள் உள்ள, ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 பணம் வழங்கப்படுகிறது.

2 /7

இந்தத் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கும்போது, அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

3 /7

தற்போது, மக்களவை தேர்தல் வருவதால் தமிழக அரசு அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

4 /7

வாக்குகளை கவர்வதற்காக, மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்ட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு இந்த நடவடிக்கையை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன?  

5 /7

சில மாதங்களுக்கு முன்னதாக, 2024 ஜனவரிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

6 /7

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மேலும் விரிவாக்கபப்டலாம் என்பது பெண்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது  

7 /7

தேர்தலில் திமுக கூட்டணி தந்த வாக்குறுதி வெற்றி பெற்று தந்ததால், தற்போது பெண்கள் அனைவருக்கும் உரிமைத்தொகை கொடுத்தாலும் அதிசயம் இல்லை...  தேர்தல் காலத்தில் நினைத்து பார்க்க முடியாததெல்லாம சாத்தியமாகிவிடும்...