பூனைகள் பேசுமா? பேசுதே!! இணையவாசிகளுக்கு ஷாக்.... நம்ப முடியாத வைரல் வீடியோ

Funny Cat Video: இந்த வீடியோவை பார்க்காமல் முதலில் கேட்டு பாருங்கள், பின்னர் வீடியோவை பாருங்கள். ஆச்சரியமான ஒரு விஷயத்தை உணர்வீர்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 8, 2023, 06:18 AM IST
  • இந்த அற்புதமான வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவால் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவுக்கு ஏற்கனவே 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் எக்கச்சக்க லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
பூனைகள் பேசுமா? பேசுதே!! இணையவாசிகளுக்கு ஷாக்.... நம்ப முடியாத வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் குரங்கு, பாம்பு, நாய், பூனை, யானை போன்ற விலங்குகளின் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு பார்க்கப்படுகின்றன. அதுவும் நாய், பூனை போன்ற, வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கு இணையவாசிகளிடம் அதிக மவுசு உள்ளது. பலரின் செல்லப்பிராணிகளாக இருக்கும் இந்த விலங்குகளையும் இவற்றின் வீடியோக்களையும் மக்கள் அதிக ஆர்வத்துடன் காண்கிறார்கள்.

இணையத்தை அழகான விலங்கு வீடியோக்களின் பொக்கிஷம் என்றே கூறலாம். மேலும் இந்த வீடியோக்கள் சில சமயங்களில், நமக்கு தெரியாத பல விஷயங்களையும், மக்கள் தங்கள் தவறுகளில் இருந்து எவ்வாறு பாடம் கற்க முடியும் என்பதையும் கற்றுக்கொடுக்கின்றன. சமீபத்திலும் ஒரு மிக அழகான விடியோ பகிரப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இரண்டு பூனைகள் இருக்கும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

சண்டையிடும் பூனைகள்

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் இரண்டு பூனைகளை காண முடிகின்றது. இரு பூனைகளும் ஒன்றோடு ஒன்று பேசுவதை இதில் காண்கிறோம். எனினும், அவை பேசுகின்றனவா அல்லது சண்டை போடுகின்றனவா என்பது தெரியவில்லை. ஆனால், இதில் வித்தியாசமான ஒரு விஷயம் நடக்கின்றது. நீங்களும் கண்களை மூடிக்கொண்டு இந்த வீடியோவின் ஒலியை மட்டும் கேட்டால், இரு குழந்தைகள் பேசிக்கொள்வது போல தோன்றும். 

மேலும் படிக்க | மனிதர்களை போல் பற்களை கொண்டிருக்கும் நண்டு - வைரல் வீடியோ

அற்புதமான அந்த பூனைகளின் வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோவுடன் கூடிய தலைப்பில், “நேற்று மாலை, என் வீட்டிற்கு வெளியே, சிறு குழந்தைகள் சண்டை இடுவதை கேட்டேன். ஆனால் வெளியே வந்து பார்த்த பின்னர் தான் அவை இரண்டு பூனைகள் என்பதைக் கண்டேன். அற்புதம்!" என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏற்கனவே 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் எக்கச்சக்க லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

'உலகில் நமக்கு தெரியாத எத்தனை விஷயங்கள் உள்ளன என்பதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'இந்த பூனைகள் பேசிக்கொள்வதை பார்க்க மிக அழகாக உள்ளது' என ஒருவர் கெம்ண்ட் செய்துள்ளார். 'ஆம்... அப்படியே குழந்தைகளின் குரல்தான்' என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பசுமாட்டை கவ்விப்பிடித்த சிங்கத்தை அசால்டாக வந்து விரட்டிய விவசாயி - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News