இஸ்லாமிய மாணவனின் கன்னத்தில் அறைந்த மாணவர்கள்... கட்டளையிட்ட ஆசிரியை - வீடியோவால் சர்ச்சை

Viral Video: 2ஆம் வகுப்பு பயிலும் இஸ்லாமிய மாணவனை அறையும்படி மற்ற மாணவர்களிடம் பெண் ஆசிரியர் கூறும் வீடியோ பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 26, 2023, 11:17 AM IST
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
  • தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆசிரியருக்கு கண்டனம்.
  • ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கல்வி அதிகாரி.
இஸ்லாமிய மாணவனின் கன்னத்தில் அறைந்த மாணவர்கள்... கட்டளையிட்ட ஆசிரியை - வீடியோவால் சர்ச்சை title=

Viral Video: பள்ளி ஆசிரியை ஒருவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிறுவனை அறையும்படி வகுப்பு மாணவர்களிடம் கூறியதுடன், ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைக் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திராப்தி தியாகி என அடையாளம் காணப்பட்ட அந்த பெண் ஆசிரியர், உத்தர பிரதேசத்தின் முசாபூர்நகர் மாவட்டத்தில் உள்ள மன்சூர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பாபூர் கிராமத்தின் தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியின் 2ஆம் வகுப்பு மாணவர்களிடம் ஒரு மாணவனை அடிக்கச் சொல்வதை வீடியோவில் நீங்கள் காணலாம்.

இச்சம்பவத்தை அறிந்த வட்ட அலுவலர் ரவிசங்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "வைரலாக உள்ள வீடியோவை ஆய்வு செய்ததில், முதல் கட்டமாக, பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடத்தை முடிக்காததால் குழந்தை அடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சில ஆட்சேபகரமான கருத்துகளையும் வீடியோவில் கேட்க முடிகிறது. இதுகுறித்து விசாரித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மேலும் படிக்க | குடிபோதையில் சிங்கத்தின் அருகில் சென்ற நபர்: கேமராவில் கைதான பயங்கரம்

மாணவர்களைத் தவிர, இரண்டு பேர் அந்த வீடியோவில் காணப்படுகின்றனர், அவர்களில் ஒருவர் ஆசிரியர், மற்ற நபரை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாக அடிப்படை கல்வி அதிகாரி ஷுபம் சுக்லா கூறினார். இருவர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அவரை தாக்கியவர்களின் மத அடையாளம் குறித்து கருத்து கேட்கப்பட்டதற்கு, கல்வி அதிகாரி சுக்லா, "இதில் விசாரணை நடைபெற்று வருகிறது என்பதால் இப்போதைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது. எங்கள் குழு இதை விசாரிக்கும், மேலும் இந்த வழக்கில் காவல்துறையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது" என பதிலளித்தார். 

இச்சம்பவம் குறித்து பதிலடி கொடுத்துள்ள மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, "அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனித இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுவது - இதைவிட மோசமான ஒரு ஆசிரியரால் எதுவும் செய்ய முடியாது" என கருத்து தெரிவித்துள்ளார். 

"இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கொளுத்திவிடப்பட்ட அதே கருத்தை பாஜக பரப்புகிறது. குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம் - அவர்களை வெறுக்காதீர்கள். நாம் அனைவரும் சேர்ந்து அன்பைக் கற்பிக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி, "நிலவுக்குச் செல்லும் தொழில்நுட்பம் அல்லது வெறுப்பின் எல்லைச் சுவரைக் கட்டும் விஷயங்கள் பற்றி பேசப்படும் இடத்தில் அதன் தேர்வு தெளிவாக உள்ளது. வெறுப்பே முன்னேற்றத்தின் மிகப்பெரிய எதிரி" என்று கூறினார்.

மேலும் படிக்க | போட்டோஷூட் அலப்பறை: மாப்பிள்ளை மீது ஏறி ஸ்டண்ட், மாஸ் மணமகள்.. வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News