Viral Video: பேஸ்பால் மட்டையால் மனைவியை இரக்கமின்றி தாக்கிய கணவர்.. ஏன் தெரியுமா?

Viral Video: சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ. ஹரியானாவின் பஞ்ச்குலாவில் தனது மனைவியை பொது இடத்தில் பேஸ்பால் மட்டையால் தாக்கிய கணவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 17, 2024, 08:14 PM IST
Viral Video: பேஸ்பால் மட்டையால் மனைவியை இரக்கமின்றி தாக்கிய கணவர்.. ஏன் தெரியுமா? title=

Husband Wife Video: ஹரியானாவின் பஞ்ச்குலாவில் கணவர் தனது மனைவியை பொது இடத்தில் பேஸ்பால் மட்டையால் கடுமையாக தாகும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து அவர் மீது எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வைரல் வீடியோவில், தனது மனைவி மற்றொரு ஆணுடன் காரில் அமர்ந்திருப்பதை பார்த்த கணவர், அவர் மனைவி அமர்ந்திருக்கும் காரை மட்டையால் தாக்கி காரின் கண்ணாடியை உடைத்து எறிகிறார். அதற்கு பிறகு, தன் மனைவியை வெளியே இழுந்து பேஸ்பால் மட்டையால் கடுமையாகத் தாக்குகிறார்.

என்னை அடிப்பதை நிறுத்துமாறு அவரது மனைவி சொல்கிறார். ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. என் மனைவி எனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டிய அவரது கணவர், தொடர்ந்து பேஸ்பால் மட்டையால் தாக்குகிறார்.

காரில் அவரது மனைவியுடன் இருந்த நபர் எதுவும் பேசாமல், அமைதியாக அங்கு நடந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறார். இறுதியில்,  உதவிக்காக அந்தப் பெண் அலறியதால் பூங்காவில் இருந்த ம்ற பார்வையாளர்கள் உடனடியாக தலையிட்டு தாக்குதலை நிறுத்தினார்கள்.

மேலும் படிக்க - இணையத்தை தெறிக்கவிட்ட தாத்தா பாட்டி: செம டான்ஸ், வீடியோ வைரல்

வைரல் வீடியோவை காண்க

 

இதனையடுத்து மனைவியின் புகாரின் அடிப்படையில், அவரது கணவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் உறுதி செய்தனர். மேலும் உடல் தாக்குதலுக்கு ஆளானதாக மனைவியால் கணவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தாக இந்தியா டுடே டிவி ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - கெத்து காட்டும் தாத்தா: ஷாக்கில் நெட்டிசன்ஸ்... வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News