இப்படி கஷ்டத்தை அனுபவிச்சதேயில்ல! சனியுடன் இணையும் செவ்வாயின் தாக்கம்!

Astrology predictions On Mars Saturn Conjunction: 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கிரகங்களின் சேர்க்கை யாருடைய கஜானாவை காலி செய்யும்? கோடிஸ்வரனையும் குப்பை மேட்டுக்கு கொண்டுவரும் செவ்வாய் - சனி இணைப்பு...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 5, 2024, 11:04 AM IST
  • செவ்வாய் கிரகத்துடன் இணையும் சனி
  • செவ்வாய் - சனி கிரகங்களின் சேர்க்கை
  • அசுப பலன்களைத் தரும் கிரக கூட்டணி
இப்படி கஷ்டத்தை அனுபவிச்சதேயில்ல! சனியுடன் இணையும் செவ்வாயின் தாக்கம்! title=

saturn and mars conjuncton 2024: 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கிரகங்களின் சேர்க்கை யாருடைய கஜானாவை காலி செய்யும்? கோடிஸ்வரனையும் குப்பை மேட்டுக்கு கொண்டுவரும்? கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கை இருக்கப் போகிறது. இந்த இணைப்பானது சில ராசிக்காரர்களுக்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கும் என்றால், சில ராசிகளின் சிரமங்களை அதிகரிக்கும்.

செவ்வாய் சனி சேர்க்கை
செவ்வாய் மற்றும் சனீஸ்வரர் ஒன்றாக இணைந்தால், ஒருவரின்  தைரியம், முன்முயற்சி, மனக்கிளர்ச்சி மற்றும் கோபம் என உணர்ச்சிகள் அனைத்தும் அதிகரிக்கும். அசுப கிரகம் என அழைக்கப்படும் சனீஸ்வரர், ஒருவரது முயற்சிகளுக்கான ஆக்கப்பூர்வமான விளைவுகளைக் கட்டுப்படுத்துகிறார். செவ்வாய் துடிபபன செயல்களை செய்ய வைப்பார்.

செவ்வாய் மற்றும் சனி ஒன்று சேரும்போது, ஒருவரின் ஆற்றல், செயல்திறன், இலக்குகளை நிறைவேற்றுவது என வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்களில் பாதிப்பு ஏற்படும்.

எவ்வளவு தான் திறமை இருந்தாலும், வாழ்க்கையில் நாம் எதைச் சாதிக்க முடியும் அல்லது அடைய முடியாது என்பதற்கான எல்லையை வகுக்கும் சனீஸ்வரருடன் இணையும்போது, செவ்வாய் யாருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.  

மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சூரியன்- ராகு... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

சனீஸ்வரர் + செவ்வாய் இணைவு 2024

கிரகங்கள் ஏற்படுத்தும் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வாழ்வில் அனுபவிக்காமல் தவிர்க்க முடியாது. சனி தற்போது கும்ப ராசியில் அமர்ந்திருக்கும் நிலையில், மார்ச் 15ஆம் தேதி செவ்வாய் கிரகமும் கும்ப ராசியில் நுழையும். கும்ப ராசியில் சனியும் செவ்வாயும் சேர்ந்து இருப்பதால், இரு கிரகங்களின் ஆபத்தான சேர்க்கை உருவாகப் போகிறது.

இந்த இணைப்பு 30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ஒரு கிரக சேர்க்கை ஆகும். இந்த கிரக நிலையானது, பலருக்கு பொருளாதாரத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம் ராசி
ஜோதிட நூல்களின்படி, சனி மற்றும் செவ்வாய் இணைவது விருச்சிக ராசியினருக்கு தீங்கு விளைவிக்கும். இந்த சேர்க்கை உங்கள் ராசியிலிருந்து நான்காவது வீட்டில் நடக்கப் போகிறது. இது, உங்கள் நிதி நிலைமைய மோசமடையச் செய்யலாம்.

இந்தக் காலகட்டத்தில் புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த புதிய முயற்சியையோ மாற்றத்தையோ செய்ய வேண்டாம். அம்மாவிடம் பேசும்போது கவனமாக பேசவும். ஏனென்றால், தாயாருடனான உறவில் பிரச்சனையை ஏற்படுத்தும் காலம் இது. அதேபோல, விருச்சிக ராசியினருக்கு ஏழரை நாட்டு சனி நடப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | Feb 5-11 Horoscope: நாளும் கோளும் சொல்லும் அறிகுறிகளை புரிந்துக் கொண்டால் வெற்றி உங்களுக்கே!

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சனி என இரண்டு கிரகங்களின் சேர்க்கை சாதகமற்றதாக இருக்கும். இந்த இணைவு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமையும் சூழ்நிலையில், நோய்கள் ஏற்படலாம். நிதி இழப்பு மற்றும் விபத்துகள் ஏற்படலாம். நசிவ வழிபாடு நிம்மதியைத் தரும்

நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். கடக ராசியினருக்கு தற்போது சனியின் தாக்கத்தில் இருப்பதால், மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். வழிபாடு என்பது பல விஷயங்களில் நன்மைகளை நல்கும். கோபப்பட வேண்டாம் என்ற அறிவுரையை ஒருபோதும் மறக்கவேண்டாம்.

மீனம்

செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கை மீன ராசியினருக்கு தீங்கு விளைவிக்கும்.  ஜாதகத்தின் 12 ஆம் வீட்டில் இந்த சேர்க்கை உருவாகப் போகிறது என்பதால், உங்கள் மீது சில தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். சில தேவையற்ற செலவுகளுக்கும் பணம் செலவாகலாம். கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம்.

மன அழுத்தம் நிதி இழப்பு, கடன் கொடுத்த பணம் வரமல் போவது என நிதி பிரச்சனைகளும் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.

மேலும் படிக்க | Rahu Transit: இன்னும் 40 நாட்களில் ராகு பெயர்ச்சி! யாருக்கெல்லாம் கஷ்டம் தருவார் ராகு?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News