Daily Astrology : பிப்ரவரி 22 சோபகிருது ஆண்டு மாசி மாதம் 10ம் நாள் யாருக்கு எப்படி இருக்கும்?

Astrology Predictions On Feb 22, 2024: உங்களுக்கு சாதகமாக இருக்குமா? தெரிந்து கொண்டு செயல்பட்டால் இந்த நாள் நல்லதாக இருக்கும்... இன்றைய ராசிபலன்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 22, 2024, 06:21 AM IST
  • இன்றைய ராசிபலன் உங்களுக்கு சாதகமாக இருக்குமா?
  • மாசி மாதம் பத்தாம் நாளுக்கான ராசிபலன்
  • 4 ராசிகளுக்கு கொஞ்சம் கவனம் தேவை
Daily Astrology : பிப்ரவரி 22 சோபகிருது ஆண்டு மாசி மாதம் 10ம் நாள் யாருக்கு எப்படி இருக்கும்? title=

இந்து மத நம்பிக்கையின் படி ஜோதிடம் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முடிவு செய்கிறது. நாளும், கோளும் இராசிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கின்றன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு நாளைத் தொடங்கினால் அது வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்

சோபகிருது ஆண்டு மாசி மாதம் 10ம் நாள் ராசி பலன்கள் (22-02-2024)

மேஷம் 
பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் சரிவை சரிசெய்வதற்கான சூழல்கள் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும்.  

ரிஷபம் 
விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.  மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். . கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும்.  .  

மிதுனம் 
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவு ஏற்படும்.  உறவுகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும்.

கடகம் 
சூழ்நிலை அறிந்து திறமைகளை வெளிப்படுத்தவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்.   அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். வேலையாட்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  

மேலும் படிக்க | மார்ச் மாத ராசிபலன் 2024: வருமானத்தை குவிக்க உள்ள 4 ராசிகள்

சிம்மம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும் இறைவழிபாடு நன்மையைத் தரும். குடும்ப பெரியவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் திடீர் விரயங்கள் உண்டாகும்.  

கன்னி 
மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளால் லாபம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவு ஏற்படும். பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.  

துலாம் 
புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும்.  செலவுகளை சமாளிப்பதற்கான சூழல்கள் அமையும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். 

விருச்சிகம்
 சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும்.  

மேலும் படிக்க | பாற்கடலை கடைந்த நாளை நினைவுபடுத்தும் மாசி மாத பிரதோஷம்! பக்தியுடன் அனுசரிப்பு!

தனுசு 
மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். இழுபறியான சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வெளிநாட்டு பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி வழி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். செலவு நிறைந்த நாள். 

மகரம் 
மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள் 

கும்பம்

பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்பங்கள் உண்டாகும்.  

மீனம் 
உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும்.  

மேலும் படிக்க | திருமண தடை நீக்கி மாங்கல்ய வரம் தரும் வழிபாடுகள்! வழிபட்டால் கைமேல் மாங்கல்ய பலன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News